மேலும் அறிய

TN Weather Update: 5 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.. மழை இருக்குமா?

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (26.05.2024) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘ரீமல்’ புயலானது, வடக்கு திசையில்  நகர்ந்து,  நள்ளிரவு (26.05.2024)  2230  மணி  – (27.05.2024) 0030  மணி   அளவில்  வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய   மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவிற்கும் (வங்கதேசம்) இடையே கரையை கடந்தது.

மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு /  மேற்கு திசை காற்று நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்  ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை, தமிழகத்தில்  ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை,  தமிழகத்தில்   ஒருசில   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:

27.05.2024 முதல் 31.05.2024 வரை:

அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில்  பொதுவாக  2-3°  செல்சியஸ் படிப்படியாக  உயரக்கூடும்.

27.05.2024: அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை  ஒட்டி  இருக்கக்கூடும்.

28.05.2024 முதல் 31.05.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் இயல்பாகவும்  / இயல்பை விட  அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 39.6° செல்சியஸ் (+0.7° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 38.9° செல்சியஸ் (+0.9° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

தமிழக கடலோரப்பகுதிகள்:

27.05.2024: தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

குமரிக்கடல்,  மன்னார்  வளைகுடா,  தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28.05.2024 & 29.05.2024: குமரிக்கடல்  மற்றும்  மன்னார்  வளைகுடா  பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.05.2024 & 31.05.2024: குமரிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மன்னார்  வளைகுடா  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

27.05.2024: மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28.05.2024: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.05.2024: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.05.2024: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், மத்திய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

31.05.2024: தெற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், மத்திய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

28.05.2024: தெற்கு  அரபிக்கடலின்  மத்திய   பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.05.2024: மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

லட்சத்தீவு  பகுதிகள், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.05.2024: லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ghibli Art: அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ghibli Art: அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
அட.. இது சூப்பரா இருக்கே.. லேட்டஸ்ட் ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி...
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
Embed widget