மேலும் அறிய

TN Weather Update: கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகும்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டி வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை : 

01.08.2023 மற்றும் 02.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்;  ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்கக்கடல் பகுதிகள்: 01.08.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02.08.2023 மற்றும் 03.08.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.08.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01.08.2023: வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02.08.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03.08.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல்  பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய   மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.08.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல்  பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.08.2023: இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

01.08.2023: கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்தியகிழக்கு  அரபிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45  முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Announcement: சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Announcement: சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடுமா? வேரில் ஆசிட்; துளிருக்கு குடையா? ராமதாஸ் சரமாரிக் கேள்வி
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு; என்சிஇடி தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!- என்ன தெரியுமா?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு; என்சிஇடி தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்டிஏ!- என்ன தெரியுமா?
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Embed widget