Aadhav Arjuna: ’’நாங்கதான் எதிர்க்கட்சி; விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்’’- ஈபிஎஸ்ஸுக்கு ஸ்கெட்ச் போடும் ஆதவ்அர்ஜூனா?
Aadhav Arjuna TVK 1st Year Anniversary: ஆதவ் அர்ஜூனா பேச்சின்மூலம் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவைப் பின்னுக்குத் தள்ள தவெக வியூகம் வகுத்துள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

நாங்கள்தான் எதிர்க்கட்சி. விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கான பதிலடியா என்று கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவைப் பின்தள்ள தவெக வியூகம்?
செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, ’’நாங்கள் சிறைக்கும் செல்வோம். கோட்டைக்கும் செல்வோம். நாம்தான் எதிர்க் கட்சி. எங்கள் தலைவர்தான் எதிர்க் கட்சித் தலைவர்.
1967 இல் மற்றும் 1977-ல் நடந்தது இப்போதும் நடைபெறும். எங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், உழைப்பு, தைரியம், நல்ல தலைவன் அதோடு சேர்ந்து உண்மையான கொள்கைகள் உள்ளன’’ என்று கூறினார்.
அடுத்த 62 வாரங்கள் விஜய் எதிர்க் கட்சித் தலைவர்
மேலும் அவர் பேசும்போது, அடுத்த 62 வாரங்கள் விஜய் எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்படுவார். 1967, 1977-ஐப்போல, ஆட்சியைப் பிடிப்போம்’’ என்று ஆதவ் அர்ஜூனா கூறி இருந்தார். இதன்மூலம் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவைப் பின்னுக்குத் தள்ள தவெக வியூகம் வகுத்துள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு பதில் சொல்லும் வகையில், 45 எம்.எல்.ஏக்களைக் கொடுங்கள் என்று கேட்க நாங்கள் அரசியலுக்கு வரவில்லை’’ என்று ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.






















