TN Corona Spike: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைகிறதா.? சென்னையில் நிலவரம் என்ன? முழு விவரம் உள்ளே..!
தமிழ்நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில், நேற்றைய தினம் கொரோனா காரணமாக 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது. புதன்கிழமை 542 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 532 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 492 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,660 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரபு அமிரகத்திலிருந்து வந்த 3 பேர், சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 4 வெளிநாட்டு பயணிகளுக்கும் சாலை மார்கமாக மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 6,744 ஆர்டிபிசிஆர் பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது அதில் 528 மாதிரிகளில் தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையில் பாதிப்பு:
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மூன்று நாட்களை ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா தொற்று குறைவாக பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில் 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 892 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மார்ச் மாதம் தொற்று சதவீதம் 10% கீழ் இருந்த நிலையில், கோவை – 12 %, திருப்பூர் – 12%, கன்னியாகுமரி – 11.9%, செங்கல்பட்டு – 11.8%, திருவள்ளூர் – 11.9%, சேலம் – 10.5%, சென்னை – 9.3% ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவின் Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் மாறுபாடு தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தொற்று பரவல் குறைவாக இருந்தாலும் சமூக பரவலாக மாறாமல் இருக்க மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை தரப்பில் அறிவிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்து பதிவானது. மேலும் தொற்று பரவல் காரணமாக ஹரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் மக்கள் கட்டாயம் அணீய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Ramzan Celebration: ரம்ஜான் கோலாகல கொண்டாட்டம்.! நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

