மேலும் அறிய

Tasmac Shop: நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நடப்பாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய அப்போதைய மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும்  மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில்  தகுதியாக 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என தெரிவித்திருந்தார், 

இதற்கான கணக்கெடுக்கும் பணிகள் நடந்து கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த அறிவிப்பு ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடத்தின் போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிடுவதற்கான அரசாணையை  கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது. இந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை நாளை முதல் (ஜூன் 22)  மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் மண்டபத்தில் என்ன நடக்கிறது? விசாரணை கோரும் பக்தர்கள்!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் மண்டபத்தில் என்ன நடக்கிறது? விசாரணை கோரும் பக்தர்கள்!
மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!
மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget