மேலும் அறிய

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

சி.வி.சண்முகத்தை ஓரங்கட்டிவிட்டு எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு பதவிகளை கொடுத்துள்ளார் இபிஎஸ். இனி என்ன செய்யலாம் என்பது தொடர்பாக சி.வி.சண்முகம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாக சொல்கின்றனர். அதோடு அதிகாரமிக்க பதவிகள் இல்லாமல் வெறும் அலங்கார பதவிகளை கொடுத்திருப்பதாக எஸ்.பி.வேலுமணியும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவுக்கெதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். தலைமை உத்தரவை மீறி செயல்பட்டதால் அவர்களுடைய கட்சிப் பதவிகளையும் பறித்தார் இபிஎஸ். கட்சி தாவல் தடை சட்டம், அமைச்சரை சிக்கல் என ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்ததால் இறுதியில் தவெக ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டு இபிஎஸ் பக்கமே வந்தனர்.

ஆனாலும் அவர்களுக்கு கட்சியில் எந்தப் பதவியும் கொடுக்காமல் வைத்திருந்தார் இபிஎஸ். இதனால் அதிருப்தியில் இருந்த விஜயபாஸ்கர் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகினார். அவர் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் இருக்கும் மற்றவர்களும் கைமீறி போய்விடக் கூடாது என்ற குரல் எழுந்த நிலையில், புதிய பதவிகளை கொடுத்துள்ளார் இபிஎஸ்.

அதாவது நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியும், தங்கமணிக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட செயலாளர் பதவிக்கு தான் அதிக மவுசு இருக்கும் என்பதால், அதிகாரமிக்க பதவிகளை கொடுக்காமல் வெறும் அலங்கார பதவிகளை மட்டும் கொடுத்துள்ளதால் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 

அதேநேரத்தில் சி.வி.சண்முகத்திற்கு இபிஎஸ் எந்த பதவியும் கொடுக்காததால் ஷாக்கில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. தவெகவுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிய பிறகு அதிமுக முக்கிய புள்ளிகள் சைலண்ட் மோடுக்கு போனார்கள். சி.வி.சண்முகம் மட்டும் அதன்பிறகும் இபிஎஸ்-க்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இபிஎஸ் தனது மகனை அரசியலுக்கு கொண்டுவரப் பார்க்கிறார் என பற்றவைத்தார். அப்படி ஒரு திட்டமே இல்லை என பதிலடி கொடுத்தார் இபிஎஸ்.

மோதல் தொடர்ந்து கொண்டே இருப்பதால் சி.வி.சண்முகத்தை இபிஎஸ் ஓரங்கட்டி வருகிறார். இந்தநிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் சி.வி.சண்முகம். அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக முக்கியமான முடிவு எடுக்கவிருப்பதாக சொல்கின்றனர். தவெகவுக்கு போவதில் விஜயபாஸ்கர் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் சி.வி.சண்முகம் தவெக பக்கம் சாய்வதற்கான வாய்ப்பு கம்மி தான் என தெரிகிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல் முடிவுக்கு வராத நிலையில் சி.வி.சண்முகம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி இருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

crime: சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ்! தட்டிக்கேட்ட காவல் அதிகாரி கொலை!
crime: சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ்! தட்டிக்கேட்ட காவல் அதிகாரி கொலை!
மணப்பாறை அருகே சாலை விபத்தில் வணிகவரித்துறை பெண் அலுவலர் பலி... பின்னால் வந்த கார் மோதியதில் விபரீதம்
மணப்பாறை அருகே சாலை விபத்தில் வணிகவரித்துறை பெண் அலுவலர் பலி... பின்னால் வந்த கார் மோதியதில் விபரீதம்
சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் 12 காலிப்பணியிடங்கள்... 16-ம் தேதி கடைசி நாள்! அரசு வேலை தேடும் இளைஞர்களே முந்துங்கள்!
சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் 12 காலிப்பணியிடங்கள்... 16-ம் தேதி கடைசி நாள்! அரசு வேலை தேடும் இளைஞர்களே முந்துங்கள்!
திருவண்ணாமலை மகா தீபத்தின் உண்மையான ரகசியம் தெரியுமா? பிரம்மாவும் விஷ்ணுவும் தேடிய அந்த ஜோதி இதுதான்!
திருவண்ணாமலை மகா தீபத்தின் உண்மையான ரகசியம் தெரியுமா? பிரம்மாவும் விஷ்ணுவும் தேடிய அந்த ஜோதி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
TN Weather News: தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Embed widget