மேலும் அறிய

யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!

பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்வுகளில் கூட குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது- அன்புமணி.

உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா... முறைகேடா? என்று விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு பதிலாக குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் எழுதிய அத்தேர்வுகளின்  விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நடந்ததாக எழுந்துள்ள புகார்கள்தான் இதற்கு காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 48 துறைகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு 42,064 பேர் எழுதிய இந்தத் தேர்வுகளில் 5 பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் பிப்ரவரி மாதம் வெளியிடப் பட்டது. மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டன.

முக்கியமான தேர்வில் கூட குளறுபடியா?

அந்த முடிவுகளில்தான் பெரும் குளறுபடிகள் நடந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்வுகளில் கூட குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு மொத்தம் இரு தாள்களையும், 3 பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும். முதல் தாளில் ஏ, பி என இரு பகுதிகள் உள்ளன. அவற்றில் முதல் பகுதி தேர்வர்களின் தமிழ்மொழிப் புலமையை அறிவதற்கானது. 50 மதிப்பெண்களுக்கான அப்பகுதியில் 40%, அதாவது 20 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் போதுமானது. இதில் பெறப்படும் மதிப்பெண்கள் தரவரிசையை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படாது.

இது எப்படி சாத்தியம்?

முதல் தாளின் பி பிரிவில் தேர்வர்களின் விருப்பப்பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப் படும்; அவற்றுக்கு தலா 1.5 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டாவது தாளில் 5 தலைப்புகள் வழங்கப்பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்வு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு 50 மதிப்பெண்கள்.

இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 40% மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 35% மதிப்பெண்களும் பெற வேண்டும். தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியலில் முதல் தாளின் பி பிரிவில் 111 மதிப்பெண்கள், அதாவது 74% மதிப்பெண்கள் பெற்ற பலருக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.

இரண்டாம் தாளில் கேட்கப்படும் 5 வினாக்களில் ஒன்றுக்கு 300 சொற்களில் கட்டுரை எழுத வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாடு பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவு ஆகிய  பாடங்களில் இருந்து வினாக்கள் எழுப்பப்படும். மொத்தம் எழுப்பப்படும் 5 வினாக்களில் தங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த ஒரு தலைப்பில் தான் தேர்வர்கள் கட்டுரை எழுதுவார்கள்.

அப்படி எழுதப்படும் கட்டுரைக்கு, அதுவும் விருப்பப்பாடத்தில் 111 மதிப்பெண் எடுத்த ஒருவரால் எழுதப்படும் கட்டுரைக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதை நம்ப முடியவில்லை. தலைப்புக்கு பொருத்தமான ஓரிரு தகவல்களை எழுதினால் கூட குறைந்தது 5 அல்லது 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். முனைவர் பட்டம் வென்ற ஒருவர், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு எதுவுமே தெரியாதவராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எவராலுமே நம்பமுடியாது

அதேபோல், முதல் தாளில் 54, அதாவது 36% மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு, இரண்டாம் தாளில் 49, அதாவது 98% மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தத் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40% அல்லது 35% என்பது மொத்த மதிப்பெண்களைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. தாள்வாரியாக தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடப்பட்டால், விருப்பப்பாடத்தில் 54 மதிப்பெண்  எடுத்த பொதுப்பிரிவு மாணவர் ஒருவர் அந்தத் தாளில் தேர்ச்சி பெறவே முடியாது. அப்படிப்பட்டவர் கட்டுரைத் தாளில்  98% மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்பதை எவராலுமே நம்பமுடியாது.

முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இரண்டாம் தாளில் 98% மதிப்பெண் வழங்கப்பட்டதும் இயல்பானதாக தெரியவில்லை. முதல் தாளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களை போட்டியிலிருந்து நீக்க வேண்டும்; முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் இவ்வாறு செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் 12 ஆண்டுகளுக்கு முன் இப்போதுதான் முதன்முறையாக நியமிக்கப்படுகின்றனர். இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும்; தகுதியுடையவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வுகளை  எழுதினர். அவர்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் எந்த முறைகேட்டுக்கும் இடமளிக்கக் கூடாது.

எனவே, உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளின் இரண்டாம் தாளுக்கான விடைத்தாள்களை  திருத்துவதில் குளறுபடி நடந்ததா? அல்லது முறைகேடு நடந்ததா? என்பது குறித்து விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை ஆள்தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும்’’. 

இவ்வாறு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிகோருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிகோருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
Chennai Electric Train : சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.! செப்.26 TO அக்.3 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் - பட்டியல் இதோ..
சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.! செப்.26 TO அக்.3 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் - பட்டியல் இதோ..
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
Embed widget