மேலும் அறிய

"விஜய் நீங்க பேசுனது சரியல்ல ஸ்டாலினை ஏளனம் செய்யாதீங்க" சப்போர்ட்டுக்குவந்த திருமா!

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடும் திட்டத்தை தவெக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் திருமாவளவன், சட்டமன்றத்தில் ஸ்டாலினை விஜய் ஏளனம் செய்யும் வகையில் பேசியது சரியல்ல என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தவெக-வின் தேர்தல் வாக்குறுதியான, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம், ஜூன் 22-ம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் முதல் அமலுக்கு வந்தது.

இத்திட்டத்துக்காக 755 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இத்திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று விஜய் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இத்திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் தற்போது 56 சதவிகித குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன.

தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட 50 ஆயிரம் முதல் ஒரு இலட்ச ரூபாய் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர்.

கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய  வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். 

இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும், முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு வீடியோக்கள்

லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை ஆட்டோ டிரைவரின் அதிரடி: பெண்களுக்கு இலவசம், அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு கட்டணம்!
மதுரை ஆட்டோ டிரைவரின் அதிரடி: பெண்களுக்கு இலவசம், அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு கட்டணம்!
பள்ளிக்கரணையை அறிவிக்கை செய்க; சென்னையை ராம்சார் நகரமாக்குக: முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கடிதம்!
பள்ளிக்கரணையை அறிவிக்கை செய்க; சென்னையை ராம்சார் நகரமாக்குக: முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கடிதம்!
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
Embed widget