IAS Officers Transfer: இந்தந்த மாவட்டங்களுக்கு இனி இவர்கள்தான் கலெக்டர்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியான அறிவிப்பில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி நெல்லை ஆட்சியராக கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன், விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேக்கப், விழுப்புரம் ஆட்சியராக பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி ஆட்சியராக ஷாஜிவாணா, கோவை ஆட்சியராக கிராந்தி குமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
View this post on Instagram
மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாடு துறை இணை செயலாளராகவும், விருதுநகர் ஆட்சியராக இருந்த மேகநாத ரெட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும், சிறப்பு திட்ட செயலாக்க அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீ வெங்கட ப்ரியா ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுத்துறை கட்டுப்பாடு அலுவலராகவும், தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவும், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காயத்ரி கிருஷ்ணன், வணிக வரித்துறை இணை ஆணையராகவும்,
மயிலாடுதுறை ஆட்சியராக இருந்த லலிதா தொழில்நுட்ப கல்வி இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.