Diwali Bonus: போனஸ் மழையா கொட்டுதே! டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% சதவீதம்...தமிழக அரசு செம அறிவிப்பு!
அரசு வழங்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Diwali Bonus: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கையெழுத்தானது.
தீபாவளி போனஸ்:
தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று கூட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. இதன்படி, "சி" மற்றும் "டி" பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகை 20% 2023-224-இல் வழங்க முதல்வர் ஆணையிட்டார்.
போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்:
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முடிவாகி உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கையெழுத்தானது. அரசு வழங்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 20 சதவீதமாக உயர்த்து வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது. அதன்படி, தமிழக அரசுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இன்றைய தினம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கையெழுத்தானது.
மேலும் படிக்க
'சசிகலா-வை சந்திக்கிறாரா ஓபிஎஸ்?’ இன்றைய ஆலோசனைக்கு பிறகு அரசியலில் அடுத்தக் கட்ட முடிவு..!