கரூர் மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு
மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தருண் குமார். இவர் மதியம் இனங்கூர்றுக்குச் சென்றிருந்த தனது தாய் தமிழ்ச்செல்வியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் வந்து கொண்டிருந்தார்.
அரவக்குறிச்சி அருகே உள்ள மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தருண் குமார். இவர் மதியம் இனங்கூர்றுக்குச் சென்றிருந்த தனது தாய் தமிழ்ச்செல்வியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு மார்க்கம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். தண்ணீர் பந்தல் அருகே வந்தபோது சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தருண்குமார் காயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த தருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு
கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ் அரவக்குறிச்சி மேட்டுப்பட்டி பிரிவு அருகே வந்தபோது சாலையை கடக்க முயன்று அடையாளம் தெரியாது. 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவாக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கரி ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
டிரைவர் படுகாயம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கரூர் மாவட்டம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு சிமெண்ட் ஆலைக்கு நிலக்கரியை ஏற்றுக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை தொகைமலை அருகே உள்ள கீழ வெளியூரை சேர்ந்த பீட்டர் என்பவர் ஒட்டி வந்தார். அந்த லாரி காலை தொகை மலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் மற்றும் பால் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் மோதிகவிழ்ந்தது. இதில் லாரியின் இடுப்பாடுகளில் சிக்கிய டிரைவர் பீட்டர் பலத்த காயம் அடைந்தார், இதை கண்ட பகுதி பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் லாரியின் இடுப்பாடுகள் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் பீட்டரை மீட்டு சிகிச்சைக்காக தோகைமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தோகை மலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து போலீசார் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கவிந்த லாரியை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவத்தால் தொகைமலை திருச்சி சாலை சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குழுவில் கருப்பு கோவிலில் இருந்து வாலையும் ரோடு செக்போஸ்ட் வரை இந்த வளைவில் ஒரு வேகத்தடை கூட இல்லை. இதனால் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இதுபோல் அடிக்கடி பகுதியில் பல விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்