Plus 2 Examination : இன்று தொடங்குகிறது பிளஸ் 2 தேர்வு : மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் என்ன..?
மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் இன்று 8.37 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று மாநிலம் முழுவதும் காலை 10 மணிக்கு 12ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வை 8,37,311 மாணவர்கள் எழுத உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு :
- பொதுத்தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது 9 மணிக்கு வந்தாலே போதுமானது.
- காலை 9. 45 மணிக்கு முதல் மணி அடிக்கும் ; அப்பொழுது மாணவ, மாணவியர்கள் தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
- தேர்வறைக்குள் சென்ற 10 வது நிமிடத்தில் 2 வது மணி அடிக்கும் : அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் பார்சலை பிரித்து இரு மாணவர்களிடம் கையொப்பம் பெறுவார்.
- 10 மணியளவில் மூன்றாவது மணி 3 முறை அடிக்கப்படும். அப்பொழுது மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்.
- மாணவ, மாணவியர்கள், கேள்வித்தாளை படித்து பார்ப்பதற்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும்
- சரியாக 10.10 மணிக்கு, 4வது மணி நான்காவது முறை அடித்தபிறகு விடைத்தாள்கள் கொடுக்கப்படும்.
- 10.15 மணிக்கு 5வது மணி அடிக்கப்பட்டதும் மாணவர்கள் பரீட்சை எழுத ஆரம்பிக்கலாம்.
- பிற்பகல் 1.30 மணியளவில் விடைத்தாள்கள் மாணவர்களிடமிருந்து பெறப்படும்.
மாணவ, மாணவியர்கள் செய்யகூடாதவை :
- பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பருவத்தேர்வு ரத்து செய்யப்படுவதன் மூலம் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
- தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் தேர்வை ரத்து செய்வதுடன் ஓராண்டு தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
- மாணவர்களின் முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகம் துணை போனால் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.
- தேர்வு மையங்களுக்கு மாணவர்களும், தேர்வு பணியில் இருக்கும் ஆசிரியர்களும் செல்போன் கொண்டு வரக்கூடாது.
தொடர்புடையவை..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்