Chennai Temperature: கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் தணியவில்லையே.. சென்னையில் 107 டிகிரி! அவதியில் மக்கள்!
Chennai Temperature : நேற்று சென்னையில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவான நிலையில் நாளுக்கு நாள் வெப்பநிலை ஏறுமுகத்தில் உள்ளது.
இந்த வருடத்தின் அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிந்தது. வழக்கத்தை விட இந்தாண்டில் அதிக வெப்பம் நிலவியதால் தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். வெயில் காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளும் அவர்களை விட்டு வைக்கவில்லை. ஆங்காங்கே அங்கேயும் இங்கேயும் பெய்த மழை, வெப்பத்தை கிளப்பிவிட்டது.
இந்நிலையில், கத்திரி வெயில் முடிந்தும் இன்று தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. நடப்பாண்டு சென்னையில் அதிகபட்ச அளவாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. நேற்று சென்னையில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவான நிலையில் நாளுக்கு நாள் வெப்பநிலை ஏறுமுகத்தில்தான் உள்ளது.
மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூர், நாகை, திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
தலைநகரத்தின் நிலவரம்
இங்குதான் இந்த பிரச்சினை என்று பார்த்தால் இந்திய தலைநகரமான டெல்லியில், இதுவரை காணாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை நிலவும் ராஜஸ்தான் மாநிலத்தின் பலோடி பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக வானிலை மையம் தெரிவித்தது.
அரபிக்கடலில் உள்ள மாலத்தீவில் உள்ள ஒரு சில பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது. இதனையடுத்து மாலத்தீவில் உள்ள மற்ற பகுதிகளிலும், லட்சத்தீவு, கேரளா ஆகிய பகுதிகளிலும் பருவ மழை தொடங்கிவிடும். அங்கு பருவ மழை தொடங்கிவிட்டால், தமிழ்நாட்டிலும் கூடிய விரைவில் பருவ மழை தொடங்கிவிடும். பருவ மழையை குறிக்கும் விதமாக காலை நேரத்தில் லேசான காற்றும் வீசி வருகிறது. இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பருவ மழை ஒன்றே தீர்வு என மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
மேலும் படிக்க : டெல்லியில் 52.3டிகிரி செல்சியஸ்: கடும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை