மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

100 Days of CM Stalin: இது முதல்வரின் மடல்... 100 நாட்களில் திறந்த எம்.கே.எஸ்., பேனா!

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இதையடுத்து, கடந்த 100 நாட்களில் அவர் எழுதியுள்ள முக்கியமான கடிதங்களை கீழே காணலாம்.

  1. ஏழு பேர் விடுதலைக்காக முதல் கடிதம்

தமிழகத்தின் முதல்வராக அவர் பொறுப்பு ஏற்றதும் முதல் கடிதமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதினார். கடந்த மாதம் 19-ந் தேதி எழுதிய அந்த கடிதத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 7 பேரையும் விடுவிக்க கோரிய தமிழக அரசின் 2018ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.   

2.செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை தொடர்பாக பிரதமருக்கு கடிதம்

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனால், தடுப்பூசிகள் பற்றாக்குறை நாடு முழுவதும் பல மாநிலங்களில் நிலவி வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கினால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் எழுதினார்.

30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!

3. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், மன நலன் கருதியும் மாநிலம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு தற்போதுள்ள சூழலில் எந்த நுழைவுத்தேர்வுகள் நடந்தாலும் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

4. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளைத் தொடங்க பிரதமருக்கு கடிதம்

மதுரையில் கடந்த 2019ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், தற்போது வரை எந்த கட்டுமான பணிகளும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்றும் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!

5. டவ் தே புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய அமைச்சருக்கு கடிதம்

கடந்த மாதம் வீசிய டவ் தே புயல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பல்வேறு மாநில மீனவர்களும் இந்த புயலால் காணவில்லை. இதையடுத்து, டவ் தே புயலால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன தமிழக மீனவர்கள் 16 பேரையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந் தேதி கடிதம் எழுதினார்.

6. கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து அளிக்க மத்திய அமைச்சருக்கு கடிதம்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நோயால் ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 3-ந் தேதி அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்து 30 ஆயிரம் குப்பிகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

100 Days of CM Stalin: இது முதல்வரின் மடல்... 100 நாட்களில் திறந்த எம்.கே.எஸ்., பேனா!

7. நாட்டில் உள்ள 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம்:

கடந்த ஜூன் 8-ந் தேதி ஊரடங்கு காரணமாக சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள், இரு காலாண்டுகளுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்து கேரளம், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

8. மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் :

கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு எழுதிய கடிதத்தில், காவிரியில் நீர் திறக்காவிட்டால் குறுவை சாகபடியும், சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

100 Days of CM Stalin: இது முதல்வரின் மடல்... 100 நாட்களில் திறந்த எம்.கே.எஸ்., பேனா!

9. கடலோரத்தில் உள்ள 9 மாநில முதல்வர்களுக்கு கடிதம் :

கடந்த ஜூன் 22-ந் தேதி சிறுதுறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கேரள முதல்வர் பினராயி விஜயன், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட கடலோர மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

10. கர்நாடக முதல்வருக்கு கடிதம்

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்று கூறிவருகிறது. இந்த சூழலில், அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், பெங்களூரின் குடிநீர்த் தேவைக்காக அணை கட்டுவதாக கூறும் கர்நாடக அரசின் கருத்தை ஏற்க முடியாது என்றும், தமிழகம்- கர்நாடகம் இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

100 Days of CM Stalin: இது முதல்வரின் மடல்... 100 நாட்களில் திறந்த எம்.கே.எஸ்., பேனா!

11. ஒரு கோடி தடுப்பூசிகள் கோரி பிரதமருக்கு கடிதம் :

கடந்த ஜூலை 13-ந் தேதி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

12. கடல்சார் மீன்வள மசோதாவிற்கு எதிராக பிரதமருக்கு கடிதம் :

கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல்சார் மீன்வள மசோதாவிற்கு எதிராக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள கடல்சார் மீன்வள மசோதா மீனவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது என்றும் கடிதத்தில் கூறியிருந்தார். மேலும், மீனவர் நலன் காக்கும் வகையிலும், கடல்வளத்தை காக்கும் வகையிலும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்தார்.

100 Days of CM Stalin: இது முதல்வரின் மடல்... 100 நாட்களில் திறந்த எம்.கே.எஸ்., பேனா!

13. பயிர்காப்பீடு திட்டத்தை மாற்ற வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் :

கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், காப்பீடு கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை குறைக்கும் வகையில், உயர்ந்த பட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்பிருந்த பழயை விகித முறையிலே கட்டண பங்கினை மாற்றியமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இப்படி முதல்வர் ஸ்டாலினின் பேனா... கடந்த 100 நாட்களில் தொடர்ந்து இயங்கியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Royal Enfield Scram 440: வந்தாச்சு ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 440 - பழசுக்கு புதுசு, என்னவெல்லாம் கொடுத்து இருக்காங்க?
Royal Enfield Scram 440: வந்தாச்சு ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 440 - பழசுக்கு புதுசு, என்னவெல்லாம் கொடுத்து இருக்காங்க?
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Embed widget