மேலும் அறிய
Advertisement
இலங்கையில் இருந்து தமிழகம் வர முயன்ற 10 பேர் கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச் சென்று இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புலம் பெயரும் இலங்கையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இலங்கை கடற்படையினர் படகை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வர இருந்ததை தொடர்ந்து அனைவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் காட்சிகள் மாறவில்லை. இன்னமும், அங்கு எரிபொருள் தட்டுப்பாடும் உணவுப் பொருள்களின் உச்சகட்ட விலைவாசியும் கட்டப்படாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச் சென்று இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புலம் பெயரும் இலங்கையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில், இலங்கையை ஒட்டியுள்ள தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்கு படகுகள் மூலம் அதிக பணம் கொடுத்து தனுஷ்கோடி பகுதிக்கு தஞ்சமாக அடைக்கலம் புகுவோர் தொடர்ந்து அங்கிருந்து படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு தலைமன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் வந்தபோது தீடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் படகை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த,குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வர இருந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இன்று தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion