Mettur Dam : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது.

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிக்கிறது!
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் நேற்று முன்தினம் 6வது முறையாக நிரம்பியது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்துகாவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாக மீண்டும் தண்ணீர்காலை 10 மணி அளவில் திறக்கப்படவுள்ளது.
இதனால் உபரி நீர் கால்வாய் ஓரங்களில்தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து உள்ளனர். தங்கமபுரி பட்டினம் அண்ணா நகர் பெரியார் நகர் பகுதிகளில் வீடு .வீடாக சென்று வருவாய்த்துறையினர்மற்றும் தீயணைப்பு படையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7500கன அடி நீரும் திறக்கப்படவுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும்நீர் இருப்பு 93.47டிஎம்சி ஆகவும் உள்ளது.கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க 6வது நாளக தடை தொடர்கிறது.





















