மேலும் அறிய
Advertisement
தருமபுரி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சி, வியாபாரிகள் கவலை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை சரிவு சாமந்தி கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது. பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் விவசாய விளைநிலங்களில் விளைவித்த பூக்களை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வகையான பூக்களின் விலை சரிந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் பூஜைக்காக பூக்கள் வாங்கி செல்ல சந்தகை்கு வந்திருந்தனர். சாமந்தி பூ கிலோ 20 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 140 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும் அரலி பூ ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் செண்டு மல்லி கிலோ 30 ரூபாய்க்கும் குண்டுமல்லி கிலோ 200 ரூபாய்க்கும், கோழி கொண்டை கிலோ 30 ரூபாய்க்கும், சன்னமல்லிகிலோ 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பூக்களின் வரத்து அதிகரிப்பால் கடந்த இரு தினங்களை விட தற்போது பூக்களின் விலை இரு மடங்கு குறைந்து விற்பனையாகி வருகிறது. ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை போன்ற மாதங்களில் தான் பூக்களின் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே விவசாயிகள் சம்பங்கி சாமந்தி ரோஜா பூ போன்ற பூக்களை அதிகப்படியாக சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் ஆவணி மாதம் வரும் இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் பூக்களின் விலை அதிகமாக விற்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நேரத்தில் பூக்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. பூக்களின் விலை குறைவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் ஆனால் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை அடைந்து வருகின்றன
தற்போது விற்பனையாகி வரும் விலையை விட இன்று மேலும் விலை குறையலாம் என எதிர்பார்க்கபடுகிறது, விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் வியாபாரிகள், விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion