Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
கப்பல் ஆடுகிறதே என்று கடலில் குதித்தால் அவர்கள் நிலை என்னவாகும்? கடலில் குதித்தவர்கள் தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று பேசினார். அப்போது அவர், "சேலத்தில் எடப்பாடி பழனிசாமிதான் ஆளுங்கட்சி, மழை வருவதை ஓராண்டுக்கு முன்பு கணிக்க முடியாத என்பதைப் போல ஆட்சி மாற்றம் என்பது ஒரு வருடத்திற்கு முன்போ, இரண்டு வருடத்திற்கு முன்போ தெரியாது. ஆனால், கடைசி ஓரிரு மாதங்களில் ஆட்சியின் அவலம் அனைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு பின்னர் ஆட்சி மாற்றம் வரும்.
எனது தந்தை 1986 ஆம் ஆண்டு சேர்மன், எம்ஜிஆர் காலத்தில் நின்றார். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். நான் நான்கு முறை இரண்டு இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, இரட்டை இலை சின்னம், எடப்பாடியர், கரைவேட்டி இவ்வளவுதான் எங்களுக்கு தெரியும். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. மக்களை நேசிக்க கூடிய கட்சி அதிமுக. மக்களால் நேசிக்கப்படும் கட்சி அதிமுக. வேரோடும் வேரோடு மண்ணோடும் இணைந்திருக்கும் கட்சி அதிமுக. பிற கட்சியில் கொடி புடிக்கலாம், கோஷம் போடலாம், பைக்கில் வேகமாக செல்லலாம் ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக தான். அதிமுக - திமுக இரண்டு கட்சிகள்தான். அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கும் - ஸ்டாலினுக்கும்தான் போட்டி எனவும் அவர் குறிப்பிட்டார். நடந்து முடிந்த தேர்தல் கமக்கான தேர்தல் அல்ல. 2026ல் நடக்கப் போகும் தேர்தல் நமக்கான தேர்தல்.
உலகத்தில் 196 ஜனநாயக நாடுகள் உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு தலைவர் தேர்தலை சந்திக்காமல், தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யப் போகவில்லை, தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் உள்ளார். கருணாநிதி சொல்கிறார் எம்.ஜி.ஆர் மீண்டும் வர மாட்டார், எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று. அப்போது அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். எந்த பிரச்சாரத்திற்கும் போகும் எடுத்துக் கொண்டே தேர்தலில் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் எம்ஜிஆர் மட்டும்தான் என்றார். நமது கட்சியின் வலிமையும் நீங்கள் என்னை பார்க்க வேண்டும். அதிமுகவில் இருப்பது நமது அனைவருக்கும் பெருமை.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும் சோர்ந்து போகாத இயக்கம் அதிமுக. இந்த இயக்கம் வாழையடி வாழையாக இருக்கும். அதிமுக தொண்டர்கள் தடம் மாறவும் கூடாது தடுமாறவும் கூடாது. அதிமுகவில் சிலர் தடம் மாறியதால்தான் இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய அலைகள் வந்தால் கப்பல் ஆடும் ஆனால் பத்திரமாக கரை சேரும். கப்பல் ஆடுகிறதே என்று கடலில் குதித்தால் அவர்கள் நிலை என்னவாகும்? கடலில் குதித்தவர்கள் தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி என்பது அவர்களுக்கு புரியாமல் போய்விட்டது" என விஜயபாஸ்கர் விமர்சித்தார்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டின்போது, ஆளுநர் காலதாமதம் படுத்தினார். மாணவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். உடனடியாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவரது உச்சபட்ச அதிகாரத்தின் பயன்படுத்தி ஆளுநர் கையொப்பம் இல்லாமல் மாணவர்களுக்காக சட்டத்தில் இயற்றினார். அதனால் தான் இன்று 3000 க்கு மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் டாக்டராக முடிந்திருக்கிறது என்று கூறினார்.