மேலும் அறிய
Advertisement
தருமபுரி : ஒரேநாளில் 344 பேருக்கு தொற்று.. மொத்த எண்ணிக்கை 31,173 ஆக உயர்வு
தருமபுரி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,173 ஆக உயர்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று அதிகபட்சமாக 344 பேருக்கு தொற்று பாதிப்பால், எண்ணிக்கை 31,173 ஆக உயர்வு.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் மூன்றாம் அலை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று என பாதிப்பு ஏற்படுகின்றது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த இரவு நேரங்களில் பொதுமுடக்கம் மற்றும் ஞாயிறு ஒரு நாள் முழு முடக்கம் என தமிழக அரசு அறிவிப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த 4 மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு முற்றிலுமாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரித்து, 100, 200 என அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று 30,829ஆக இருந்த வைரஸ் தொற்று, இன்று இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக அதிகரித்து, 344 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,173 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 29,371 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1521 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இதுவரை 281 பேர் வைரஸ் தொற்று பாதிப்பால் உயிர் இழந்து உள்ளனர். தொடர்ந்து வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion