மேலும் அறிய

'திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் பணம் மட்டும்தான்' - கே.என்.நேரு

எடப்பாடி பழனிச்சாமி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து சேலத்தில் 10 தொகுதிகளை கைப்பற்றி உள்ளார்

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிச்சயம் பெற்றுத் தருவார் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் பணம் மட்டும்தான்' - கே.என்.நேரு

சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 89 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை பயணத்தை குறிக்கும் 'தமிழர் தலைவரின் வாழ்வும் பணியும்' என்ற நூலினை வெளியிட்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, தந்தை பெரியார் இல்லை என்றால் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் என்னைப் போன்ற அமைச்சர்களுக்கு வேலையே இருந்திருக்காது. மேலும், வீரமணி உடனான சில சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் திராவிட கட்சியின் துணைத் தலைவர் பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் பணம் மட்டும்தான்' - கே.என்.நேரு
பின்னர், சேலம் மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் பணம் மட்டும்தான்; கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக, ஆட்சியில் இருந்ததால் தற்போது வசதியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து சேலத்தில் 10 தொகுதிகளை கைப்பற்றி உள்ளதாகவும், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்து அந்த வெற்றியை அவர் எட்டியுள்ளதாக தெரிவித்த கே.என்.நேரு தற்போது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் பெற்றுத் தருவார் என்றார். மேலும் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகி உள்ளதால் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் தேர்தலை தைரியமாக சந்தியுங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என். நேரு வரும் 11 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கடந்த மாதம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 46 ஆயிரம் மனுக்களில் 26 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் விரைந்து செயல்பட்டால் அந்த எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் பணம் மட்டும்தான்' - கே.என்.நேரு

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மேற்கு மாவட்ட பொறூப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget