சேலத்தில் ஊதிய உயர்வு, அவுட்சோர்ஸிங் முறையை கைவிடக் கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2019ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதியே வழங்க வேண்டிய ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய மின் வாரிய ஊழியர்கள் மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், அவுட்சோர்ஸிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மின்வாரிய ஊழியர்கள் உணவு இடைவேளை நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று ஆண்டுகள் முடிவடைந்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய சிஐடியு மத்திய தொழிற்சங்கத்தினர் சேலம் மாவட்டம் உடையாபட்டி துணை மின் நிலையம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு உணவு இடைவேளை நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியே வழங்க வேண்டிய ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய முன் வாரிய ஊழியர்கள் மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் மின்வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள முன்வாரிய ஊழியர்கள அடுத்த 2024 அதிகபடியானோர் ஒய்வு பெற உள்ளதால் காலிபணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தனர். மேலும் மின்வாரியத்தில் வேலை வாய்ப்புகளை பறிக்கும் அவுட்சோர்ஸிங் முறையை கைவிட வேண்டும். அகவிலைப்படி வேஜ் ரிவிஷன் சரண்டர் ஆகிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசும் மின்வாரியமும் உடனடியாக கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கர்ணா வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர் கருப்பண்ணன் கூறுகையில், “தமிழ்நாடு மின்சாரத் துறையில் உள்ள காலி பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். மின்சாரத் துறையில் ஆள் பற்றாக்குறை நிலவி வருவதால் தற்போது உள்ள ஊழியர்களுக்கு கூடுதல் வேலை அளிக்கப்படுகிறது. அதற்கான உரிய சம்பளத்தையும் அரசை வழங்குவது இல்லை. எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என்றார்.
மேலும், நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். தற்போது மூன்று வருடங்கள் நிறைவடைந்து நான்காம் வருடம் நடந்து வரும் நிலையில் இதுவரை அரசு சார்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று கூறினார். மேலும், நீண்ட ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாக்கி உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு மின்வாரியத்தில் தனியாரை புகுத்த கூடாது. அரசு இதனை மீறினால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.