மேலும் அறிய

Job Alert: மாதம் ரூ.30,000 ஊதியம்; பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

Job Alert: சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்

சேலத்தில் உள்ள சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம்  வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

  • மைய நிர்வாகி (Centre Administrator)
  • முதன்மை ஆலோசகர் ( Senior Counsellor)
  • தொழில்நுட்ப வல்லுநர் பணியிடம் (IT Admin) 
  • வழக்கு பணியாளர் (Case Worker)
  • காவலர் (Security guard)
  • பல்நோக்கு உதவியாளர் 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.
  • ஒரு ஆண்டு தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சேலத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • காவலர் பணியித்திற்கு மட்டும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டுபவருக்கு முன்னிரிமை அளிக்கப்படும். 
  • 2 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். 
  • பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு 8,10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • மைய நிர்வாகி - ரூ.30,000/-
  • முதன்மை ஆலோசகர் - ரூ.20,000/-
  • தொழில்நுட்ப வல்லுநர் பணியிடம் - ரூ.18,000/- 
  • வழக்கு பணியாளர் - ரூ.15,000/-
  • காவலர் - ரூ.10,000/-
  • பன்முக உதவியாளர் - ரூ.6,400/-

மொத்த பணியிடங்கள் - 13

வயது வரம்பு விவரம்

மைய நிர்வாகி, முதன்மை ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணியிடத்திற்கு 23 நிரம்பியவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

வழக்கு பணியாளர், காவலர், பன்முக உதவியாளர் ஆகிய பணிக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்,

அறை எண் 126, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 

சேலம் - 636 001

தொடர்புக்கு - 0427 - 2413213

விண்ணப்பிக்க கடைசி நாள் - 08.11.2023

மேலும் வாசிக்க..

Job Alert : உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸில் வேலைவாய்ப்பு விவரம் இதோ.. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முகாம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget