ஊராட்சிகளை சேலம் மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு... மக்களுடன் இணைந்து எம்.எல்.ஏ தர்ணா
மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் சட்டமன்ற உறுப்பினர் அருள் எச்சரிக்கை.

சேலம் மாவட்டம் செட்டிசாவடி ஊராட்சி பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சியின் விரிவுபடுத்துதல் திட்டத்தின் கீழ் செட்டிசாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, விநாயகபுரம் ஊராட்சியை சேலம் மாநகராட்சியோடு இணைப்பதற்கு முடிவெடுத்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க செல்ல புறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குறிப்பாக நான்கு பேர் மட்டுமே சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுங்கள் என அறிவுறுத்திய நிலையில் பெண்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் காவல்துறையின் தடையை மீறி நடந்தே செல்ல முடிவெடுத்து நடந்தே சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் செட்டிசாவடி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களுடன் இணைந்து சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் வருகை தந்தார். மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் அருள், ஒரு பொழுதும் செட்டி சாவடி, கொண்டபநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்திப்பர் சட்டமன்ற உறுப்பினர் அருள், சட்டமன்றத்தில் சேலம் மாநகராட்சியில் விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அப்போது குறைகளை மட்டும் கூறுங்கள் என்று கூறினர். சேலம் மாநகராட்சி 60 கோட்டங்கள் மட்டும் போதும். முடிந்தால் கன்னங்குறிச்சி, கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சியோடு இணையுங்கள். மாநகராட்சி உடன் இணைந்தால் சொத்து வரி குடிநீர் பதில் என வரிகள் பல மடங்கு உயரும். எனவே அரசு உடனடியாவேண்டும்னை செய்து மாநகராட்சி விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அருள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்களுடன் மனு அளிக்க வந்தார். அப்போது மனுகொடுக்க வந்த சட்டமன்ற உறுப்பினர் அருளை மாவட்ட ஆட்சியரை சந்திக்க காலதாமதம் ஆன நிலையிலும், பல்வேறு இடத்திற்கு அலைய வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அருள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த காவல்துறையிடம் சட்டமன்ற உறுப்பினர் அருள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் கூறுகையில், செட்டிச்சாவடி ஊராட்சி மாநகராட்சியோடு இணைத்தால் தங்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் பாதிக்கப்படும். அதேபோன்று தேசிய ஊரக வேலைத்திட்டமும் தங்களுக்கு கிடைக்காமல் போகும் இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதி கூலி வேலைக்கு சென்று தான் நாங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறோம். இதனால் செட்டிசாவடி ஊராட்சி மாநகராட்சியாக இணைக்க கூடாது என நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

