சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு - சேலத்தில் பெரும் சோகம்
இனி உயிரிழப்பு நடைபெறாமல் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (25), இவர் நூல் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா (22) இருவருக்கும் திருமணமாகி ஓருஆண்டு ஆன நிலை 4 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பாக உள்ள குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது வாந்தி ஏற்பட்டுள்ளது. அப்போது சாக்கடை கால்வாயில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தபோது மயங்கி சாக்கடை கால்வாய்க்குள் விழுந்துள்ளார்.
இதனால் சுவாச குழாய், நுரையீரல் உள்ளிட்டவைகளில் சாக்கடை கழிவு நீர் உள்ளே புகுந்துள்ளது. பின்னர் பத்து நிமிடத்திற்கு பிறகு அந்த வழியாக வந்த டெலிவரிபாய் சத்தம்கேட்டு அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார், சந்தியா சாக்கடை கால்வாய் மூழ்கி இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இதுதொடர்பாக அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனியின்றி உயிரிழந்தார். பின்னர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும் நடவடிக்கை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், வீட்டின் முன்பாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முறையாக பணிகள் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டு வைத்துள்ளனர். சாக்கடை கால்வாய் தண்ணீரை தேக்கி வைத்ததால் தான் கர்ப்பிணி பெண் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்தனர். முறையாக தண்ணீர் சென்று கொண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும், பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் குற்றம்சாட்டினர். எனவே சாக்கடை கால்வாயில் ஆழம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்பிற்காக மேல் தடுப்பு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு முன்பாக ஒரு முதியவர், இதே இடத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு குழந்தைகள் விழுந்து மீட்கப்பட்டுள்ளனர். இது இரண்டாவது உயிரிழப்பாக ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற இனி உயிரிழப்பு சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

