Electoral Roll: வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்... சேலம் மாவட்டத்தில் மொத்தம் 29,60,593 வாக்காளர்கள்
ஆண்கள் 14,73,024 பேரும், பெண்கள் 14,87,294 பேரும், இதரர் 275 பேரும் உள்ளதாக சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரைவு வாக்காளர் பட்டியல் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 29,60,593 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் ஆண்கள் 14,73,024 பேரும், பெண்கள் 14,87,294 பேரும், இதரர் 275 பேரும் உள்ளதாக சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,11,540 பேரும், பெண்கள் 1,17,781 பேரும், இதரர் 7 பேரும் மொத்தம் 2,29,328 பேர் உள்ளனர். ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,15,524 பேரும் பெண்கள் 1,22,744 பேரும், இதரர் 17 பேரும் மொத்தம் 2,38,285 பேர் உள்ளனர். ஏற்காடு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,37,598 பேரும் பெண்கள் 1,43,430 பேரும், இதரர் 15 பேரும் மொத்தம் 2,81,043 பேர் உள்ளனர். ஓமலூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,49,576 பேரும் பெண்கள் 1,42,102 பேரும், இதரர் 9 பேரும் மொத்தம் 2,91,687 பேர் உள்ளனர். மேட்டூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,38,534 பேரும் பெண்கள் 1,34,977 பேரும், இதரர் 15 பேரும் மொத்தம் 2,73,526 பேர் உள்ளனர்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,43,615 பேரும் பெண்கள் 1,39,355 பேரும், இதரர் 22 பேரும் மொத்தம் 2,82,992 பேர் உள்ளனர். சங்ககிரி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,35,482 பேரும் பெண்கள் 1,32,707 பேரும், இதரர் 23 பேரும் மொத்தம் 2,68,212 பேர் உள்ளனர். சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,48,498 பேரும் பெண்கள் 1,49,516 பேரும், இதரர் 62 பேரும் மொத்தம் 2,98,076 பேர் உள்ளனர். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,35,144 பேரும் பெண்கள் 1,41,867 பேரும், இதரர் 35 பேரும் மொத்தம் 2,77,046 பேர் உள்ளனர். சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,27,387 பேரும் பெண்கள் 1,33,640 பேரும் , இதரர் 48 பேரும் மொத்தம் 2,61,075 பேர் உள்ளனர். வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,30,126 பேரும் பெண்கள் 1,29,175 பேரும், இதரர் 22 பேரும் மொத்தம் 2,59,323 பேர் உள்ளனர்.
முன்னதாக வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடும்போது, அதிமுகவினர் பூத் வாரியாக வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அடுத்தமுறை பூத் வாரியாக வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 3.15 கோடி பெண் வாக்காளர்கள், 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 8,027 பேர் உள்ளனர். தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர்.