மேலும் அறிய

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிருங்கள் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை வெப்பத்தில் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது. சூரியன் உதயமானது காலை 5:30 மணிக்கு தோன்றுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை வெயிலில் தாக்கும் மிகவும் அதிகரித்து உள்ளது. இது மட்டும் இன்றி காற்றில் வெப்பம் அதிக அளவில் உள்ளது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வைக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளி செயல்படுகிறது. காலை பள்ளிக்கு வரும் மாணவர்கள் மதியமும், மதியம் பள்ளிக்கு வரும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வெயிலில் அளவு 105.08 டிகிரியாக பதிவாகி இருந்தது. இன்று 106.1 டிகிரியாக பதிவாகியுள்ளது.

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிருங்கள் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

நாளுக்குநாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் அவசிய காரணங்கள் தவிர நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதைத் தவிர்த்தல் வேண்டும். அவசிய காரணங்களால் வெளியே செல்லும் பயணத்தின்போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, கற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும், திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமாக வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்குச் செல்லலாம். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் 108 ஆம்புலன்சை மருத்துவ உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வருவதை தவிருங்கள் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்கவும். அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். குறிப்பாக, கோடைகாலத்தில் குளிர்ந்த நீரால் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொள்ளலாம். வாகனங்களுக்குள் குழந்தைகளை விட்டுச் செல்லுதலைத் தவிர்க்க வேண்டும். மேலும், வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. குறிப்பாக, மது அருந்துதல் மற்றும் கேஸ் நிரப்பப்பட்ட குளிர் பானங்களை அருந்துதல், அளவுக்கு அதிகமான தேனீர் மற்றும் காபி அருந்துதல், அதிக அளவில் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget