மேலும் அறிய

‛சத்துணவில் 49 ஆயிரம் காலி பணியிடங்கள்’ அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 49 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனத் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் இன்று காலை சேலம், நாமக்கல் , கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்ட சமூக நலன்மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது , “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மிக முக்கியமான துறையாகும். திருநங்கைகள் மற்றும் முதியவர்கள் காக்கும் துறை. குழந்தை திருமணம் நடந்தால் உடனே  அதை தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடத்துபவர்களுக்கு சட்டப்படி உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்” இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

‛சத்துணவில் 49 ஆயிரம் காலி பணியிடங்கள்’ அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

பிறகு அமைச்சர் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சமூக நலத்துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து விரிவாக ஆய்வு செய்தார். அதன்பிறகு, இன்று மாலை சமூகநலத் துறை சார்பாக 135 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 11 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது. மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் வைப்புத்தொகையாக  4 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் வீதம், ஒரு லட்சம் ரூபாயும், திருநங்கைகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் கொரோனா சிறப்பு நிவாரண நிதி 25 நபர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்றால், பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் தாய்,தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள் என 6 குழந்தைகளுக்கு மொத்தமாக 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

‛சத்துணவில் 49 ஆயிரம் காலி பணியிடங்கள்’ அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்த பெண்களுக்கு தற்போது திருமண உதவி வழங்கப்பட்டது. கடந்த ஆட்சிகாலத்தில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த  தொகை ரூ 3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. தமிழகத்தில் அனுமதியில்லாத இல்லங்களை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா ஊரடங்கு நேரத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்களை தடுக்க ஏற்கனவே உள்ள நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 49 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர், இயக்குனர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Breaking News LIVE, JULY 15:தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Breaking News LIVE, JULY 15: தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | டெல்லி பறக்கும் EPSமாறும் காட்சிகள்?புதுதெம்பில் ஸ்டாலின்Police Pocso Arrest | சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் காவலர் கைது அதிரடி காட்டிய SP மீனாHaridwar Bus Accident | அன்பே சிவம் பட பாணியில்..நடந்த விபத்து...ஹரித்வாரில் பயங்கரம்Rahul Thanks MK Stalin | ’’நன்றி ஸ்டாலின்! நீங்க தான் BEST’’ பாராட்டிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Breaking News LIVE, JULY 15:தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Breaking News LIVE, JULY 15: தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Mohan G : கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!
Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!
காலாவதியான உரிமம் ! தெரு நாய்களை தற்போதைக்கு கட்டுப்படுத்த முடியாது - மாமன்றத்தில் ஆணையாளர் தகவல்
காலாவதியான உரிமம் ! தெரு நாய்களை தற்போதைக்கு கட்டுப்படுத்த முடியாது - மாமன்றத்தில் ஆணையாளர் தகவல்
Embed widget