மேலும் அறிய

Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்; நீர்வரத்து 2வது நாளாக 10,000 கன அடியாக் நீட்டிப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 10,500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 26,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்; நீர்வரத்து 2வது நாளாக 10,000 கன அடியாக் நீட்டிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 4,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நீர் வரத்து குறைந்ததால் நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 10,500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்; நீர்வரத்து 2வது நாளாக 10,000 கன அடியாக் நீட்டிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 5,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
Ajith in Next Race; அசத்தும் அஜித் குமார்;  அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
அசத்தும் அஜித் குமார்; அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
Rangoli Kolam: பக்தர்களே! வாசலில் இனிமேல் இந்த முருகன் ரங்கோலி கோலங்களை போடுங்க!
Rangoli Kolam: பக்தர்களே! வாசலில் இனிமேல் இந்த முருகன் ரங்கோலி கோலங்களை போடுங்க!
ADMK:
ADMK: "சேந்தாதான் ஜெயிக்க முடியும்" இபிஎஸ்-க்கு தூது விடும் ஓபிஎஸ் - மனம் இறங்குவாரா எடப்பாடியார்?
அடுத்த லெவலுக்கு தயார்...10 ஆண்டுகளுக்கு பின் இணையும் சந்தானம் ஆர்யா கூட்டணி
அடுத்த லெவலுக்கு தயார்...10 ஆண்டுகளுக்கு பின் இணையும் சந்தானம் ஆர்யா கூட்டணி
Embed widget