மேலும் அறிய

மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்

டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ள நிலையில், மழை மேகங்கள் உருவாகி வரும் நிலையில், சென்னயில் பல இடங்களில் மழையானது பெய்து வருகிறது.

வலு குறைந்த டிட்வா புயல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. டிட்வா புயல் இலங்கையை புரட்டிபோட்ட நிலையில், தமிழகத்தில் தென், டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்யயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மழையானது பெய்யவில்லை. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மழையில்லாமல் அவ்வப்போது வெயில் தான் அடித்தது. இந்த நிலையில் டிட்வா புயல் மழை மேகங்களை உருவாக்க  முடியாமல் திணறியதாகவும், சென்னையை நெருங்கும் போது மழை மேகங்களை உருவாக்க கூடும் என வானிலையாளர்கள் தெரிவித்திருந்த்தனர்.

சென்னைக்கு அருகே டிட்வா புயல்

இதற்கு ஏற்றார் போல இன்று அதிகாலை முதல் சென்னையில் மழையானது பெய்து வருகிறது. காலையில் அலுவலகங்கள் செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மழை தொடர்பாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் "டிட்வா" தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னைக் கடற்கரையில் இருந்து சுமார் 70 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கில் நிலைத்திருக்கிறது.  இது சென்னைக் கடற்கரைக்கு அருகே தொடர்ந்து நிலை கொண்டு அடுத்த ஒரிரு நாட்களில் படிப்படியாக முழுமையாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கிலிருந்து வரும் ஒரு மேற்கத்திய காற்றழுத்த தாழ்வு நிலை டிட்வாவின் புயலுடன் மோதி, ஈரப்பதத்தை வடக்கிலிருந்து அளித்து, அமைப்பின் வடபகுதியில் புதிய மேகக்கூட்டங்களை உருவாக்கி வருகிறது. 

 இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக் கடற்கரைக்கு மேலும் நெருக்கமாக வரும்போது, இந்த வடக்கு பக்க மேகத்துண்டுகள் மேற்கு திசையை நோக்கி இழுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இதை அடுத்த சில மணி நேரங்களில் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். நம்பிக்கை அளிக்கும் வகையில், அமைப்பின் மையப்பகுதியில் புதிதாக உருவாகும் ஆழமான மேகக்கூட்டங்கள் தொடர்ந்து உருவாகி வருவதால், இன்று வடக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

தரைக்காற்றுடன் இன்று கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் மற்றும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். அதேசமயம், காவிரி டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மழை வானிலை குறிப்பாகக் குறையும். இருப்பினும், மேற்கத்திய காற்றினால் மாலை/இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.காவிரி டெல்டா & தென் மாவட்ட விவசாயிகள் வயல்வெளிகளில் தண்ணீரை வடியவைத்து வேளாண் பணிகளை தொடங்க முயற்சிக்கலாம், அடுத்த பரவலான மழை வாய்ப்பு டிசம் 4,5 தேதிகளில் எதிர்ப்பார்க்கலாம்.

 தற்போதைய வானிலை அமைப்பு கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால், கடல் சீற்றம் கடுமையாகவே இருக்கும், கரையோரப் பகுதிகளில் பலத்த சீற்றக் காற்று வீசும்.மீனவர்களும் பொதுமக்களும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடற்கரைப் பகுதிகளுக்கோ கடலுக்கோ செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget