மேலும் அறிய
Advertisement
POCSO : தர்மபுரி : சமூக வலைதளம் மூலம் வலை.. ஆசைவார்த்தை கூறி கடத்தல்.. இளைஞர் போக்சோவில் கைது
தருமபுரி அருகே சமூகவலைதளம் மூலம் பழகி சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி அருகே உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் நண்பர் ஆகியுள்ளார். தொடர்ந்து அடிக்கடி சமூக வலைதளத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் சிறுமியை ஆசை வார்த்தை கூறி நவீன்குமார் தருமபுரிக்கு வந்து கடத்திச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வீட்டை விட்டு பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் தாய், தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தருமபுரியை சேர்ந்த சிறுமிக்கும் விழுப்புரத்தை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் நவீன்குமார் என்பவரும் அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து செல்போன் நம்பரை வைத்து காவல் துறையினர் தேடி வந்தனர்.
அப்பொழுது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, திருமணம் செய்து தஞ்சாவூர் பகுதியில் நவீன் குமார் தங்கியிருந்து காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து நவீன்குமாரையும் சிறுமியை காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை கடத்திச் சென்று, குழந்தை திருமணம் செய்து, பாலியல் வன்புணர்வு செய்ததாக நவீன்குமாரை தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பழகி சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி குழந்தைத் திருமணம் செய்து கொண்டு சம்பவம் தருமபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai to Theni : 12 மணிநேர காத்திருப்பு.. மதுரை டூ தேனி ரயில்சேவை மீண்டும் தொடங்கியது..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion