K.P.Ramalingam: சேலத்தை தலைநகராக கொண்டு தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் - கே.பி. ராமலிங்கம்
134 தொகுதிகளை கொண்ட மாநிலம் ஒன்றும், 100 தொகுதிகளை கொண்ட மாநிலமாக மற்றொன்றும் இருக்கட்டும். மாநிலத்தைப் பிரிக்க முதல்வர் தயார் என்றால், நிதி வழங்குவதற்கு பாஜக தயார்.
சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, 60 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றுள்ளார். உலக வரலாற்றை மிகப்பெரிய நிதி நிலை அறிக்கையை தந்த நாடு என்ற பெருமையுடன் 48 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் எங்க பார்க்கும் அளவிற்கு இந்தியா நிதிநிலை அறிக்கை உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையின் மூலம் இந்தியா ஒட்டுமொத்தமாக வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி பெறும். இந்த நிதியை பற்றி எதிர்க்கட்சிகள் பேச வழி இன்றி தமிழ்நாடு பெயர் குறிப்பிடப்படவில்லை என முதல்வர் கூறி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு பெயர் குறிப்பிடப்பட்டது. ஆனால் அப்போது ஏன் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.
அமராவதியை ஆந்திர தலைநகராக சிறப்பு நிதி ஒதுக்கியது போல ஏன் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கேட்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் இரண்டாக பிரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்ற போது 20 ஆயிரம் கோடி ஆந்திராவிற்கு தலைநகர் உருவாக்குவதற்கு கட்டமைப்பு பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று தேர்தல் அறிக்கையிலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில் தலைநகர் அமைப்பதற்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தோம். அதுமட்டுமல்லாமல் யார் ஆட்சிக்கு வந்தாலும் தலைநகர் உருவாக்குவதற்கு சிறப்பு நிதி வழங்கப்பட வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது தலைநகர் உருவாக்குவதற்கு முடிவு எடுக்கவில்லை. ஆனால் சந்திரபாபு நாயுடு அமராவதி தான் தலைநகரம் என்று விரிவாக திட்ட அறிக்கை கொடுத்தது நாள் சிறப்பு நீதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்குவதற்கு பாஜக தயார். சேலத்தை தலைநகராக கொண்டு இன்னொரு மாநிலத்தை உருவாக்க ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பினார். மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கு தேவை உள்ளது. 234 தொகுதிகளை வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என அவசியமில்லை. 134 தொகுதிகளை கொண்ட மாநிலம் ஒன்றும், 100 தொகுதிகளை கொண்ட மாநிலமாக மற்றொன்றும் இருக்கட்டும் என்றார். மாநிலத்தைப் பிரிக்க முதல்வர் தயார் என்றால், நிதி வழங்குவதற்கு பாஜக தயார் என்றார். சேலத்தை தலைநகராக கொண்டு மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. சேலத்தை தலைநகராக கொண்டு தமிழகத்தை இரண்டாக பிரிக்கப்பட வேண்டும். அப்படி பிரித்தால் சேலத்திற்கு 20,000 கோடி மத்திய அரசிடம் இருந்து வாங்கி தருவதற்கு தமிழக பாஜக தயார் என்று கூறினார்.
மேலும், தமிழக அரசு எந்தெந்த துறைக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தியது இதற்கு முன்னர் நடைபெற்ற போராட்டங்களை மறைப்பதற்காக தான் என்றார். தமிழ்நாடு தற்போது போதை பொருட்களின் கிடங்காக மாறி உள்ளது. இதையெல்லாம் மறைப்பதற்காக அதிகார பலம், அரசியல் பலம், மீடியா பலத்தை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்கள். முதல்வர் எந்த துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது என துறைவாரியாக கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.