மேலும் அறிய
Advertisement
தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி மதுவிற்பனை கடந்த ஆண்டை விட 30 லட்சம் குறைந்தது...!
''கடந்த இரண்டு நாட்களில் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 68 அரசு மதுபான கடைகளில் 7 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை''
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரில் 8 கடைகள், கிராம புறங்களில் 60 கடைகள் என மொத்தம் 68 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில கடைகள் பார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில், தினமும் சராசரியாக 1.50 கோடி முதல் 2 கோடி வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட ஒரு சில பண்டிகை நாட்களில் மட்டும் ஒரு கோடி முதல் 1.5 கோடி வரை மது விற்பனை கூடுதலாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி நாளன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பீர், பிராண்டி, விஸ்கி என பல்வேறு வகையான மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தொடர்ந்து பண்டிகை நாட்கள் என்பதால், காலை கடு திறப்பதற்கு முன்பே கடையின் முன்பு, மதுபானப் பிரியர்களின் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து அரசு மது கடை திறந்ததும் ஒவ்வொருவரும் மூன்று, நான்கு, ஐந்து என பாட்டில்களை அள்ளி சென்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் தீபாவளி நாளன்று ஒரே நாளில் 4 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்றது.
ஆனால் தருமபுரி மாவட்டத்தில் சாதாரண நாட்களில் இரண்டு கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது தீபாவளி பண்டிகை நாள் என்பதால், 4 ஆம் தேதி தீபாவளியன்று ஒரே நாளில் 4 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து தீபாவளிக்கு அடுத்த நாள் தருமபுரி மாவட்டம் முழுவதும் 3 கோடிக்கு விற்பனையானது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரண்டு நாட்களில் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 68 அரசு மதுபான கடைகளில் 7 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் தீபாவளி நாளன்று அமாவாசை, மகாவீரர் ஜெயந்தி வந்ததால், பெரும்பாலானோர் இறைச்சி வாங்கவில்லை. இதனால் மது கடைக்கு மது பிரியர்கள் வருகையும் சற்று குறைந்து இருந்தது. இதனால் கடந்த ஆண்டை விட தீபாவளி நாளன்று விற்பனையானதை விட, இந்த தீபாவளியன்று தருமபுரி மாவட்டத்தில் மது விற்பனை சுமார் ரூ.32 லட்சம் ரூபாய் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion