கர்நாடக மாநிலம் கனமழை.. காவிரி ஆற்றில் இத்தனை கன அடி நீர்வர வாய்ப்பு.. சேலம் ஆட்சியர் அறிவிப்பு
மாவட்ட நிர்வாகம் 24 மணிநேரமும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் கன மழை பெய்து வருவதையொட்டி மேட்டூர் அணை மூலம் காவிரியில் நீர் திறப்பு இன்று (4.8.2022) இரவு அல்லது நாளை காலை மேலும் அதிகமாக 2,40,000 கன அடி வரை நீர் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் 24 மணிநேரமும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக தற்பொழுது 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீர் நிலையங்களில் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்கக் கூடாது குளிக்க மற்றும் துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தற்பொழுது 16 கண் மது வழியாக வெளியேற்றப்படும் நீர் அதிகளவில் வருவதால் மேட்டூர் - எடப்பாடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூரில் இருந்து சங்கிலி முனியப்பன் கோயில், ரெட்டியூர், கோல்நாயக்கன்பட்டி, நெத்தி காடு, பூலாம்பட்டி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1,87,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2,10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், காவிரிக் ஆற்றில் அமைந்துள்ள சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினருக்கு மேட்டூர் அணையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.