மேலும் அறிய
Advertisement
தருமபுரி: காவிரி ஆற்றில் ராட்சத கிரேன் மூலம் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொதுமக்கள் கொண்டு வரும் ஏராளமான விநாயகர் சிலைகளை காவல் துறையினரே ராட்சத கிரேன் மூலம் கரைத்தனர்.
இந்துகளின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதூர்த்தி விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் வைத்து பூஜை செய்த விநாயகர் சிலைகளை இன்று முதல் நீர்நிலைகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கரைத்து வருகின்றனர். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் விநாயகர் சிலை கரைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிருந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. ஆனால் குளிக்க அனுமதியில்லை. அதே போல் மாவட்டத்தில் இருமத்தூர், நாகாவதி அணை, தொப்பையாறு ஆகிய நான்கு இடங்களில் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வந்த 100 க்கும் மேற்பட்ட சிலைகளை ஒகேனக்கல் காவல் நிலையத்தில் அனுமதி டோக்கன் பெற்ற பிறகு சிலையுடன் 4 பேரை மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பிறகு முதலை பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில் சிலையை இறக்கி வைத்து விட்டு செல்கின்றனர். மேலும் பக்கதர்கள் கொண்டு வந்த சிலைகளை காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளூர் பரிசல் ஓட்டிகள் ராட்சத கிரேன் மூலம் சிலைகளை தூக்கி ஆற்றில் கரைக்கின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருப்பதால், சிலை கரைக்க வருபவர்கள் காவிரி ஆற்றங்கரையோரங்களில் இறங்கி குளிக்காமல் இருக்கவும், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வம் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் மாவட்டத்தில் இருமத்தூர், நாகாவதி அணை, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கபட்டது.
தருமபுாியில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜீலை மாதம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடியாரை பொதுச்செயலாளராக நியமித்து தீா்மானம் நிறைவேற்றியது. பொதுக்குழுவை எதிா்த்து ஒபிஎஸ் சாா்பில் நீதிமன்றம் சென்ற நிலையில் தற்போது பொதுக்குழு செல்லும் என்று, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீா்ப்பு வழங்கியதையடுத்து தருமபுாி அதிமுகவினர், மாவட்ட அலுவலகம் முன்பும், நான்கு அண்ணா சிலை முன்பும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினா். இந்த நிகழ்சசியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
பொது அறிவு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion