சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு... வெறிச்சோடின சாலைகள்.. மக்கள் முழு ஒத்துழைப்பு..
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள் வழக்கம்போல் இன்று இயங்கும் என்று வேளாண் துணை இயக்குனர் அறிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது. சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிய மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வைத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கி நிலையில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இந்த நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. சாலையில் தேவையில்லாமல் சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இனிமேல் சாலையில் சுற்றித்திரியும் மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வைத்து எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். சேலம் மாவட்டம் முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையாளர் கூறும்போது, இரவு மற்றும் காலை என இரண்டு வேலைகளாக காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஒரு சிலர் சாலைகளில் தேவையில்லாமல் வருகின்றன அவர்களை தடுத்து நிறுத்தி அடையாளத்தை உள்ளிட்டவைகளை சோதனை செய்த பிறகு தேவையில்லாமல் சுற்றித் திரிவது தெரியவந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று பொதுமக்கள் முழுமையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள் வழக்கம்போல் இன்று இயங்கும் என்று வேளாண் துணை இயக்குனர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் உழவர் சந்தைகளில் ஏராளமான பொதுமக்கள் கூட்டமாக குவிந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள் நாளை நோய் தடுப்பு விதிகளை கடைபிடித்து வழக்கம் போல் செயல்படும் என வேளாண் துணை இயக்குனர் நாசர் அறிவித்துள்ளார். சேலம் மாநகராட்சி பகுதியில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, எடப்பாடி , தம்பம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய பகுதிகளிலும் 11 உழவர் சந்தைகள் உள்ளது. நாளை முழு ஊரடங்கு இருந்தாலும் 11 உழவர் சந்தைகள் வழக்கம்போல செயல்படும் என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )