மேலும் அறிய
Advertisement
பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு; வினாடிக்கு 14,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது
காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வினாடிக்கு 16,000 கன அடியிலிருந்து 14,000 கன அடியாக நீர்வரத்து குறைவு.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கடந்த ஒரு மாத காலமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது மழை முழுவதுமாக குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 6200 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளக்காடாக காட்சியளித்து வந்த காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக படிப்படியாக நீர்வரத்து குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18,000கன அடியிலிருந்து சரிந்து 14,000 கன அடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்தது.
மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பிரதான அருவிக்கு செல்கின்ற நடைபாதைகள், பிரதான அருவி, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தற்பொழுது 42 வது நாளாக தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சேதம் காரணமாக, குளிப்பதற்கான தடை நீடிப்பதால், காவல் துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது நாட்டின் சுதந்திரத்தை போற்றும் வகையில் கடந்த 13,14,15, ஆகிய மூன்று தினங்களில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று நாட்டின் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் நாட்டில் அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடினர்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுதந்திர தினம் முடிந்து மூன்று நாட்கள் கடந்த பிறகும் கூட தேசிய கொடிகள் இறக்கப்படாமல் உள்ளது. இதில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் வீடுகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை இறக்காமல் கட்சிக் கொடிகளைப் போல் இன்றும் பறந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் கம்பிகளில் தேசியக்கொடி சுழன்று கொண்டிருக்கிறது. இதில் தேசிய கொடியை பறக்கவிட்ட பொதுமக்கள், வணிகர்கள் அறியாமையால், கட்சி கொடி போன்று கழட்டாமல் விட்டுள்ளனர். ஆனால் பொறுப்புள்ள ஒரு மக்கள் பிரதிநிதியின், அரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் மீது கொடி பறந்து தான் இருக்கிறது. இதனை படம் பிடித்த செய்தியாளரை, அரூர் சட்டமன்ற உறுபபினர் வே.சம்பத்குமார், தொலைபேசியில் தொடர்பு கொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் மேலே ஏறி, ’தேசிய கொடியை கழற்றுவதற்கு சிறு வயது பிள்ளைகள் இல்லை. நீ வந்து கழட்டி கொடு, சீக்கரம் வா’ என்று திமிராகவும் ஏளனாகமாகவும் பேசியுள்ளார். அரூர் சட்டமன்ற உற்றுப்பினர், செய்தியாளரிடம் பேசிய ஆடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுதந்திர தினம் முடிந்து மூன்று நாட்கள் கடந்தும் கூட கட்சிக்கொடி போல் தேசியக்கொடி பறந்து கொண்டே இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே இதை கவனத்தில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கேட்டுக் கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion