Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக என்பது இதுவரை கல்வித்துறையில் மறுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து கல்வித்துறை அமைச்சராக இருப்பது வரலாற்றுப் படைப்பு.
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்தநாள் அவரது கனவு மது கூடாது, போதை கூடாது என்பதுதான். அந்தக் கனவை நிறைவேற்றும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த மதி ஒழிப்பு மாநாட்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க உள்ளனர். இரண்டாம் தேதி நடைபெறும் மாநாடு மத்திய அரசு, மாநில அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநாடு நடைபெறும். தீர்மானங்களும் சிறப்பாக ஏற்றப்படும். எனவே இந்த மாநாட்டில் ஜனநாயக சக்திகள், மதுவை ஒழிக்கக் கூடியவர்கள், போதை பொருள் வேண்டாம் என்று சொல்பவர்கள் அத்தனை பேரும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது படித்த கேள்விக்கு, 75 ஆண்டு பவள விழா கொண்டாடி வரும் சூழலில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது கொள்கையில் ஒரு இயக்கம் சமாதானத்திற்கு எதிராக, வாரணாசிரமத்திற்கு எதிராக, ஆரியத்திற்கு எதிராக வலுவாக கட்டுப்போடு இயங்கிக் கொண்டு வருகிறது என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் தான். கலைஞர்களில் அவரது மகன் ஸ்டாலின் திமுகவை கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார். இன்று சமாதான எதிராக கொள்கை அளவில், கருத்துகள் அளவில் தெளிவாக இருக்க கூடிய ஆளுமை உதயநிதி ஸ்டாலின். யாரும் இதை மறுக்க முடியாது. சமீபத்தில் சனாதனத்திற்கு எதிராக சன்பரிவார் கும்பல் அச்சுறுத்தியபோது, நான் இந்த அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன் என முழங்கியவர் உதயநிதி ஸ்டாலின். அண்ணன் திருமாவளவன் பேசாதய்யா சனாதனத்திற்கு எதிராக நான் பேசி விட்டேன் என்று திருமாவளவன் கருத்தையும் சொன்னவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருப்பது என்பது இந்திய அளவில் சமாதானத்திற்கு எதிராக முழங்கியவர் துணை முதல்வர் ஆகியுள்ளார். இன்று துணை முதல்வராக இருக்கக்கூடிய பவன் கல்யாண் கூட லட்டு உருட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் சனாதனத்திற்கு எதிராக முழங்கிக் கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பும் பதவியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்கிறோம், வாழ்த்துகின்றோம், பாராட்டுகிறோம் என்றார்.
அமைச்சரவை மாற்றத்தை விசிக வரவேற்கிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக என்பது இதுவரை கல்வித்துறையில் மறுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து கல்வித்துறை அமைச்சராக இருப்பது வரலாற்றுப் படைப்பு. மாற்றத்துக்குரிய படைப்பாக பார்க்கிறோம். இந்த அரசு திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்விக்கு, இது குறித்து எங்களது தலைவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். கூட்டணியில் குழப்பமும் இல்லை, விரிசலும் இல்லை. கூட்டணியில் தொடர்கிறோம் என்பது தான் அதற்கான பொருள். தலைவரின் உரைக்கு கூடுதலாக கோனார் உரை யாராலும் எழுத முடியாது. எனவே தலைவரின் வழிகாட்டுதலின்படி நாங்கள் பயணிக்கின்றோம் என்று கூறினார்.