மேலும் அறிய
Advertisement
தருமபுரி : வள்ளிமதுரை வரட்டாறு அணை நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
விநாடிக்கு 30 கன அடி தண்ணீரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திறந்து வைத்து, மலர் தூவினார்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டு இன்று முதல் 25 ஏரிகள் பாசன வசதி பெறும் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 2255 ஏக்கர் நிலங்களுக்கு 20 நாட்களுக்கும், நேரடி பாசனம் மூலம் புதிய ஆயக்கட்டு பரப்பு 2853 ஏக்கர் நிலங்களும், 20 நாள் என 40 நாட்களுக்கு 18.04.21 முதல் தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று விநாடிக்கு 30 கன அடி தண்ணீரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திறந்து வைத்து, மலர் தூவினார். இதன் மூலம் வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, புதூர், எல்லப்புடையாம்பட்டி ஆகிய 25 கிராமங்களில் உள்ள 5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த விழாவில் எம்பி செந்தில்குமார், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion