Dharmapuri: ஒகேனக்கல்லில் சுற்றுலா தல பணிகள்; நேரில் பார்வையிட்ட ஆட்சியர்
ஆகஸ்ட் மாதத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
தருமபுரி: ஒகேனக்கல்லில் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த ரூபாய் 18 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை சர்வதேச அளவில் மேம்படுத்த அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் சுமார் ரூபாய் 17 கோடியே 57 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒகேனக்கலில் நடைபெற்ற வரும் மேம்பாட்டு பணிகளுக்காக 3.10 ஏக்கர் நிலம் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டு, இதில் நுழைவாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணெய் குளியலுக்கான இடங்கள், உடை மாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளை கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டார்.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்த பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது அவசியம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி பொது மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கேட்டுக்கொண்டார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்