மேலும் அறிய
Advertisement
7 கின்னஸ் சாதனைகளை படைத்த தந்தை, மகன்....வீடு முழுவதும் சாதனை சான்றிதழ்கள்..!
தருமபுரியில் பல்வேறு நிகழ்வுகளில் சாதனை செய்து 7 கின்னஸ் சாதனை படைத்துள்ள தந்தை, மகன். வீட்டில் புகைப்படங்கள் போல் நிரம்பியுள்ள சான்றுகள்.
தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த பழனிகுமார்-புவனேஸ்வரி தம்பதியினர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 8 வயதில் அஸ்வின் சுதன் என்ற மகன் உள்ளார். சிறுவன் அஸ்வின் சுதன் குழந்தை பருவத்திலிருந்து சுறுசுறுப்பாக இருந்துள்ளார். சென்னையிலிருந்து சொந்த ஊரான தருமபுரிக்கு வரும்போது கண்களில் தென்படுவதை பார்த்து, நினைவில் வைத்துக் கொண்டுள்ளார். இதனை அறிந்த பெற்றோர்கள் சிறுவனின் நினைவாற்றாலை கண்டு வியந்து போயுள்ளனர். தொடர்ந்து சிறுவனை ஏதாவது ஒரு சாதனையாளராக மாற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அப்பொழுது இணையத்தில் தேடி பார்த்துள்ளனர்.
அப்பொழுது கின்னஸ் சாதனை பட்டியலில் இருந்ததை கண்டறிந்து சிறுவனுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கியுள்ளனர். இதில் ஒரு நிமிடத்தில் அதிகப்படியான காகித விமானங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக செலுத்துதல். மேலும் பள்ளி புத்தக பையில், விரைவாக புத்தகம் உள்ளிட்ட பொருட்களை நிரப்புதல், நிறுவனங்களின் பெயர்களை அவர்களுடைய லோகோவை வைத்து அடையாளம் காணுதல், குறைந்த நேரத்தில் கட்டிடம் வடிவமைப்பு செய்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டார்.
இதில் அஸ்வின் சுதன் ஒரு நிமிடத்தில் அதிகப்படியான நிறுவனங்களின் பெயர்களையும், அவர்களுடைய லோகோவை வைத்து அடையாளம் காணுதல் என்ற முயற்சியில் 81 நிறுவனங்களின் பெயர்களை அடையாளப்படுத்தி வெற்றி பெற்றார். மேலும் புத்தகப்பையில் புத்தகம், பென்சில் பாக்ஸ், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவைகளை பையில் வைத்தல், அதேப்போல் கட்டிட வடிவமைப்பு உள்ளிட்டவைகளில் சாதனை செய்துள்ளார். இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைத்து, நடுவர்கள் முன்னிலையில், வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். இது கின்னஸ் சாதனை வரலாற்றில் இடம் பிடித்து சிறுவனை அங்கீகரித்து கின்னஸ் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுவரையில் சிறுவன் நான்கு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். மேலும் புதிதாக மூன்று சாதனைகளை கின்னஸ் சாதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், சிறுவனுக்கு பயிற்சி கொடுத்து வந்த தந்தை பழனிக்குமார், காகித விமானங்களை இலக்கில் நிரப்பும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் 25 முறை வெற்றி பெற்றார். தொடர்ந்து 3 நிமிடத்தில் அதிகப்படியான காகித விமானங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக செலுத்துவது என்ற முயற்சியில் 62 முறை வெற்றி பெற்றார். மேலும் ஒருமுறை கூட தவறாமல் அதிகப்படியான காகித விமானங்களை ஒன்றின் பின் ஒன்றாக வெற்றிகரமாக ஒரு குறிப்பிட்ட இலக்கில் செலுத்துதல் என்ற முயற்சியில்17 முறை வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரும் சேர்ந்து இதுவரை 7 கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். மேலும் 3 அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையாளர்களின் வீட்டில் சுவற்றில் புகைப்படம் போல், கின்னஸ் சாதனை சான்றிதழ்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவன் அஸ்வின் சுதன் அதிகபட்சமாக ஏழு உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இதுவரை உலக சாதனை பட்டியலில் தனி ஒருவர் 10 உலக சாதனை படைத்தது மட்டுமே அதிகபட்சமாக இருந்து வருகிறது. அந்த சாதனை பட்டியலையும் முந்திவிட்டு அதிக உலக சாதனை படைத்தவர்கள் என்ற சாதனைக்காகவும் இந்த சிறுவன் முயற்சி மேற்கொண்டு உள்ளார். இந்த தந்தை மகன் மட்டும் உலக சாதனைக்கு சொந்தக்காரர்களாக இல்லை. சிறுவனின் தாத்தா சுப்பிரமணியனும் லிம்கா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion