மேலும் அறிய
தருமபுரியில் மக்கள் அதிகம் கூடும் 7 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் திறப்பு.. விவரம்..
குற்றச் சம்பவங்களை தடுக்க மாரண்டஅள்ளியில் அதிக மக்கள் கூடும் ஏழு இடங்களில் அதிநவீன கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார்.

தருமபுரியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் மாரண்ட அள்ளி முக்கிய பேருராட்சியாக இருந்து வருகிறது. 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மத்திய வசதி தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து திருட்டு, செயின் பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி, போதை பொருள் கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றசம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நகரின் முக்கிய பகுதிகளில் கேமராக்களை பொருத்த மாரண்டஅள்ளி காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர், மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரின் உதவியுடன் நகரின் முக்கிய பகுதிகளான பேருந்துநிலையம், நான்குரோடு, பழைய பஸ் நிலையம், ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மல்லாபுரம்சாலை மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் 7இடங்களில் 26கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் நிலையத்தில் இதற்கென்று தனி கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் நடைப்பெற்றது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச் செல்வன் திறந்து வைத்து பேசியதாவது, "தற்போது குற்றசம்பங்களை தடுக்க மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றது. ஆனால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆன்ட்ராய்டு போன் மூலம் பாலியல் குற்றங்கள், பணம் மோசடி என கடந்தாண்டை விட பல்வேறு குற்றச்சம்பங்கள் அதிகரித்து வருகின்றன, தொழில் நுட்பத்தை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், தவறான செயல்களுக்கு பயன்படுத்த வேண்டாம்" என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து, இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
-------------------------------
தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் பட்டுக்கூடு வரத்து அதிகரித்து, ரூ.36.09 இலட்சத்திற்கு ஏலம்.
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர். தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து விற்பனையானது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில், பட்டுக்கூடுகள் வரத்து அதகரித்து 145 விவசாயிகள் கொண்டு வந்த 5800 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.36.09 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 145 விவசாயிகள் கொண்டு வந்து 5800 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.36.09 இலட்சத்திற்கு விற்பனையானது. இதில் குறைந்தபட்சம் ரூ.434 க்கும், அதிகபட்சமாக ரூ.736-க்கும், சராசரியாக 616 ரூபாய் என ஏலம் போனது.
மேலும் கடந்த வாரம் 130 கிலோ என குறைந்த அளவில் பட்டுக் கூடு விற்பனைக்கு வந்தது. ஆனால் இன்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 5800 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.36.09 இலட்சத்திற்கு விற்பனையானது. மேலும் பட்டுக்கூடுள் வரத்தும், விலையும் அதிகரித்ததால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கடந்த 6 மாதங்களுக்கு பின் பட்டுக்கூணு வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















