மேலும் அறிய

வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - தருமபுரி ஆட்சியர் எச்சரிக்கை

வன விலங்குகளை துன்புறுத்துவது, வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை - தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், இந்த யானைகள் தொடர்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. ஓரிரு யானைகளுடன் இணைந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி வந்த மக்னா யானை ஒன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு முதுமலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - தருமபுரி  ஆட்சியர்  எச்சரிக்கை
 
அதைத் தொடர்ந்து, அந்த மக்னாவுடன் தருமபுரியில் சுற்றிவந்த ஒற்றை ஆண் யானை கிராமங்கள், விளைநிலங்களில் அவ்வப்போது நுழைவதும், வனத்துக்குள் செல்வதுமாக உள்ளது. இதுதவிர, மாரண்ட அள்ளி அருகே 2 குட்டிகளுடன் 2 பெண் மற்றும் 1 ஆண் என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டு குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இவ்வாறு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலக்கோடு வனச்சரக பகுதியையொட்டி அச்சம் ஏற்படுத்தி வரும் யானைகள் வெளியேறாதபடி தடுக்க வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.‌ ஆனாலும், வனத்துறை சார்பில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க தற்காலிக தீர்வு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் 1 ஆண் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் அப்பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வந்தன.இதனையடுத்து மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். 
 
இந்த நிலையில், மாரண்டஹள்ளி அருகே மின்வேளிலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தருமபுரி மாவட்டத்தில் உள்ள காப்பு காடுகளில் நுழைவது வன விலங்குகளை துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சாரத்துறை இணைந்து சிறப்பு ரோந்து பணி மேற்கொண்டு, சட்ட விரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டது தெரியவந்தால், அந்த மின்னிணைப்பு மின்சார துறையினரால் துண்டிக்கப்படும். மேலும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் சட்ட விரோத மின்வேலியில் சிக்கி வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், வனத் துறையினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வயலில் மின்வேலி அமைத்து வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - தருமபுரி  ஆட்சியர்  எச்சரிக்கை
 
வன விலங்குகளை வேட்டையாடுதல், வனத்திற்கோ, வன விலங்களுக்கோ குந்தகம் விளைவித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்சமாக 07 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகையுள்ளது. இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாக அறிந்தால், பொதுமக்கள் இலவச தொலைப்பேசி எண் 1800 425 4586 வாயிலாக வனத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
IPL Auction 2025 LIVE: 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Embed widget