(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழ்நாடு தினம்; தருமபுரியில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்
அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி தரும் நிகழ்வை தத்ரூபமாக மாணவ, மாணவிகள் நடித்துக் காட்டினர்.
தருமபுரியில் தமிழ்நாடு தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.
தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி நேதாஜி பைபாஸ் ரோடு நான்கு ரோடு, பெரியார் சிலை, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த, தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட வகையான மூலிகை தாவரங்கள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு நாள் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலைகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் வழங்கினார். இந்த கலை நிகழ்ச்சியில் அதியமான், ஔவையார், வேடமணிந்து, அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி தரும் நிகழ்வை தத்ரூபமாக மாணவ, மாணவிகள் நடித்துக் காட்டினர். இந்நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்