மேலும் அறிய
Advertisement
தருமபுரி: மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் - அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்
திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தருமபுரி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு தராமல் திமுக மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார்.
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ,பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நிகழ்ச்சிகளில் அழைப்பு தராமல் திமுக மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து பூமி பூஜை மற்றும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை அரூர் அடுத்த கீழானூர் வாணகயாற்றின் குறுக்கே ரூ.4.40 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜை செய்துள்ளார். இதற்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாருக்கு தகவல் தெரிவிக்காமல் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புறக்கணித்து திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறி, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அதிமுகவின் எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி இருவரும் தருமபுரி ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், அரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கீழனூர் பகுதியில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த அதிமுக காலத்தில் பாலம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்ட நிலையில் இன்று தருமபுரி திமுக பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜை செய்துள்ளார். இப்பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான தனக்கு தகவல் தராமல் பூமி பூஜை நடைபெற்றுள்ளது . அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை புறக்கணித்து பூமி பூஜைகள் மற்றும் திறப்பு விழாக்கள் நடைபெறுகிறது . இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே புகார் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் தகவல் ஏதும் தராமல் பூமி பூஜை நடைபெற்று உள்ளது. தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் புறக்கணிக்கிறார்களா என்று சந்தேகமாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு பாலத்தை திறந்து வைத்தார் என்பதற்காக வேலூர் காவல் துறை அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேபோல் தருமபுரி மாவட்ட திமுக மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து புறக்கணித்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட திட்ட அலுவலர் பாபு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது எடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தால், பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion