மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகனின் தார் தொழிற்சாலைக்கு சீல்
பென்னாகரம் அருகே அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகனின் தார் தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிளியனூர் கிராமத்தில் அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகனுக்கு சொந்தமான தார் பிளான்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையால் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாகவும், சுகாதாரமான குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான புல் தீவனம் உள்ளிட்டவைகள் பாதிக்கபடுகிறது. மேலும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், உடல் அரிப்பு, வாந்தி, தலைவலி உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது என கடந்த 8 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் அதிமுக ஆட்சி என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காதததையடுத்து பாதிக்கபட்ட விவசாயி முருகேசன் என்பவர் தார் பிளாண்ட்டை தடை செய்யகோரியும், அதன் உரிமையாளர் அதிமுக பிரமுகர் டி.ஆர். அன்பழகன் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் அங்கு ஆய்வு செய்த சுற்றுசூழல் துறை அதிகாரி்கள் தார் தொழிற்சாலையால் சுற்று சூழல் பாதிக்கப்படுவதை உறுதி செய்தனர். தொடர்ந்து இன்று சுற்றுசூழல் அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் காவல் துறையினர் பாதுகாப்புடன் அதிமுக பிரமுகர் டி.ஆர்.அன்பழகனின் தார் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து தொழிற்சாலைக்கு சீல் வைத்ததும், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு-விலை குறைவால், மார்க்கெட்டுக்கு செல்லாமல், சாலையோரம் விற்பனை செய்யும் விவசாயிகள்
வறட்சியை தாங்கி வளரும் பயிராகவும், குறைந்த அளவிலான தண்ணீரில் வளர்ந்து பலன் தரும் பயிராகவும் பப்பாளி உள்ளது. அதேபோல, பல்வேறு சத்துகளை உள்ளடக்கிய பழமாக பப்பாளி இருப்பதால், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் ஆகிய 7 வட்டங்களிலுமே பரவலாக பப்பாளி சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டம் முழுக்க 300-க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் பப்பாளி சாகுபடி நடக்கிறது. இங்கு விவசாயிகள் பெரும்பாலும் ரெட் லேடி ரக பப்பாளியையே அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர்.
இந்த ரக பழங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதே இதற்கு காரணம். ஆனால் கடந்த சில மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருவதால், பாப்பாளி விளைச்சல் அதிகரத்துள்ளது. இதனால் பப்பாளி விலை குறைந்து கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. இதனால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் மார்கெட்டுக்கு எடுத்து செல்லும் கூலி கூட கிடைக்காததால், பப்பாளி வயல் உள்ள பகுதியிலேயே பிரதான சாலையை ஒட்டி தற்காலிக கடை அமைத்து நேரடியாக பழத்தின் அறுவடையை பொறுத்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் தன்னிறைவான வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion