மேலும் அறிய

சேலம்: மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் .. தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

சேலம் மாவட்ட அம்மாபேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருத்தேர் விழா இன்று நடைபெற்று வருகிறது.

ஆடி பண்டிகை சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் திருவிழா களைகட்டியுள்ளது. தீ மிதித்தல், அலகு குத்துதல், கரகாட்டம், வான வேடிக்கை, வண்டி வேடிக்கை என சேலம் மாநகரம் முழுவதும் வைபவங்களும் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றது. சேலம் மாவட்ட அம்மாபேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருத்தேர் விழா இன்று நடைபெற்று வருகிறது. மாரியம்மன் திருக்கோவில் திருத்தேரினை மங்கள வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காந்தி மைதானம் பகுதியில் தொடங்கி வையாபுரி தெரு, ராமலிங்க தெரு வழியாக முக்கிய வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட தேரோட்ட வைபவத்தை வழியெங்கிலும் பக்தர்கள் கண்டு அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சேலம்: மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் .. தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடி மாதம் பண்டிகையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் சேலம் மக்கள் மகிழ்ச்சியோடு ஆடி மாதத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 18 பட்டிக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் ஆடிப் பண்டிகை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் கடந்த 26 -ஆம் தேதி பூச்சாட்டுகள் விழா உடன் மிகச் சிறப்பாக தொடங்கியது. இதன்பின் 8 ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நேற்று 10-ஆம் தேதி விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

சேலம்: மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் .. தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ஆடி மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி முதல் நாள் முதல் கடைசி நாள் வரை என்பதால் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும், குகை, அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டையில் உள்ள அம்மன் திருக்கோவில்களிலும் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டும். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறும் ஆடி பண்டிகை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆடி முதல் வாரத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இரண்டாம் வாரம் கம்பம் நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை ரத்து செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் இந்த ஆண்டு மாரியம்மன் பண்டிகை கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 1000 கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Embed widget