மேலும் அறிய
Advertisement
பாப்பிரெட்டிபட்டி அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்
சாலையில் ஏற்ப்பட்ட தீ விபத்து குறித்து ஏ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்த கருணாநிதி (50) தங்களது பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கோவிலின் அன்னதானத்திற்காக சேலத்தில் இருந்து நன்கொடையாக பெற்ற 10 அரிசி மூட்டைகளை தனது ஆம்னி காரில் எடுத்து வந்துள்ளார். அப்பொழுது கார் இருளப்பட்டி அருகே சாலையில் வந்து கொண்டிருந்த போது காரின் முன்பகுதி திடீரென புகை வந்துள்ளது. இதனை தொடர்ந்து காரை சாலையோரம் நிறுத்தி பார்த்துள்ளார். அப்பொழுது காரில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கருணாநிதி அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் காரில் இருந்த நன்கொடையாக பெற்ற அரிசி மற்றும் காரின் முன்பகுதி. ஸ்டேரிங், மற்றும் இருக்கைகள் தீயில் எரிந்த சேதமானது. இந்த விபத்து குறித்து ஏ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion