மேலும் அறிய
Advertisement
38 ஆயிரம் டன் குப்பை விவசாயிகளுக்கு இயற்கை உரமானது...தருமபுரி நகராட்சியின் அசத்தல் செயல்
தற்போது 38 ஆயிரம் டன் உரம் தயாரிக்கவும் மக்காத பொருட்கள் பிரித்து அகற்றும் பணி பயோமென்னின் மூலம் நடந்து வருகிறது.
தருமபுரி நகராட்சியில் சேகரிக்கப்படும் 38 ஆயிரம் டன் குப்பை பயோ மைனிங் மூலம் உயிரே அகழாய்வு இயற்கை உரமாக தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் இருந்து தினசரி 28 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை பென்னாகரம் சாலையில் நகராட்சி குப்பைமேட்டில் கொட்டப்பட்டது. அங்கு குப்பை நிரம்பியதால் அடங்கும் ஊராட்சியில் 11 ஏக்கர் காலி நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நகராட்சி குப்பைமேட்டில் காற்று மற்றும் வெயில் காலங்களில் அடிக்கடி தீ பிடிப்பதால் அருகில் உள்ள கிராமங்களுக்கு தொந்தரவாக இருந்தது. இதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி குப்பை மேட்டில் மூன்று கோடி மதிப்பீட்டில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு இயந்திரங்கள் மூலம் உரிய அகழாய்வு பயோ மைனிங் என்ற முறையில் நுண்ணுயிர் உரமாக மாற்றப்படுகிறது. அங்குள்ள குப்பைகள் தரம் பிரித்து உரமாகவும் பிளாஸ்டிக் பொருட்கள் துணிகள் கற்கள் என தரம் பிரித்து மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. பழைய உரங்கள் தரம் பிரித்து அகற்றப்பட்டது. தற்போது 38 ஆயிரம் டன் உரம் தயாரிக்கவும் மக்காத பொருட்கள் பிரித்து அகற்றும் பணி பயோமென்னின் மூலம் நடந்து வருகிறது. இதில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை உரம் விநியோகம் செய்து வருகின்றனர்.
தயாரிக்கும் உரங்கள் தற்போது தருமபுரி வள்ளலார் திடலில் நடக்கும் புத்தக கண்காட்சியில் பார்வைக்கு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த உரங்களை வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே .பன்னீர்செல்வம் கலெக்டர் சாந்தி ஆகியோர் பார்வையிட்டு கேட்டிருந்தனர்.
இதுகுறித்து தருமபுரி நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- தருமபுரி நகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 28 டன் குப்பை தடங்கம் ஊராட்சியில் உள்ள குப்பை மேட்டில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 11 ஏக்கரில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் 5 ஏக்கரில் இருந்த குப்பை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று கோடி செலவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அகற்றப்பட்டது. மீதமுள்ள ஆறு ஏக்கரில் 38 ஆயிரம் டன் குப்பை உள்ளது. இந்த குப்பைகளை மறுசுழற்சி செய்ய தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோ மைனிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை இயந்திர மூலம் அரைக்கப்பட்டு மண்ணாக மாற்றப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பணிகள் இன்னும் ஏழு மாதங்கள் நடக்கும். ஏற்கனவே ஆறு ஏக்கரில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டதால் 2500 நாட்டு ரக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள ஐந்து ஏக்கரில் குப்பைகள் இல்லாத நிலை வரும்போது அந்த இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து காடு போல் உருவாகும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion