கிஷோர் கே சுவாமிக்கு தொடரும் பாஜக ஆதரவு; ட்விட் போட்டு நீதி கேட்ட வானதி!
பிரதமர் மோடியை விமர்சிக்கும் திமுகவினரை தமிழக அரசு கைது செய்யுமா என்று கிஷோர் கே சுவாமிக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை கேவலப்படுத்தும் திமுகவினரை கண்டிக்கும் தைரியம் தமிழக அரசுக்கு உள்ளதா என்று கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் அவதூறுகளை எதிர்கொள்ளாத தலைவர்களே கிடையாது. ஆனால் தங்களைப்பற்றி எழுதும் நபர்களை குறி வைத்து கைது செய்யும் தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடியை கேவலப்படுத்தும் தன் அறிவாலயம் ஆட்களை கண்டிக்கும் தைரியம் உள்ளதா?’ எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் defamatory content எதிர்கொள்ளாத தலைவர்களே கிடையாது.
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 14, 2021
ஆனால் தங்களைப்பற்றி எழுதும் நபர்களை குறி வைத்து கைது செய்யும் தமிழக அரசுக்கு @PMOIndia @narendramodi அவர்களை கேவலப்படுத்தும் தன் @arivalayam ஆட்களை கண்டிக்கும் தைரியம் உள்ளதா? https://t.co/IaKWhipNij
முன்னதாக, தலைவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சோஷியல் மீடியா பிரபலம் கிஷோர் கே.சுவாமி 28 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியது, அண்ணல் அம்பேத்கரை ஆங்கிலேய அடிப்பொடி என்றது என கிஷோரின் ட்விட்டர் பக்கங்கள் அவதூறுகளால் அழுக்கேறியவை.கைது செய்து நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கிஷோரை வக்கிர புத்திகொண்டவர், பெண்கள் பற்றிய கிஷோரின் குரூரமான கருத்துகள் கேவலமான எண்ணம் கொண்டவை என விமர்சித்துள்ளது தாம்பரம் கிளை நீதிமன்றம். யூட்யூப் ட்விட்டர் எனச் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளில் ஈடுபடுபவர்களை அண்மைக் காலமாகவே கைது செய்து வருகிறது ஆளும் அரசு. அந்த வகையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘காரணமே இல்லையென்றாலும் என்னைக் கைது செய்யுங்கள்’ என ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்குச் சவால்விட்ட கிஷோர் ஸ்வாமி தற்போது கைதாகியிருக்கிறார்.
'உள்ளாடை அணிந்து விளையாடுங்கள்’ ரசிகர் யோசனைக்கு பதிலடி தந்த கிரிக்கெட் வீராங்கனை
கிஷோரின் இந்தக் கைதை அடுத்து, தி.மு.க.வின் லியோனிக்கள் இருக்க கிஷோர் மட்டும் கைதா எனப் பொங்கி எழுந்துள்ளது தமிழ்நாடு பாரதிய ஜனதா. கருத்து சொன்னதுக்கு கைதென்றால் அறிவாலயத்தின் சரிபாதிபேர் சிறையில்தான் இருக்கவேண்டும் என விமர்சித்துள்ளார் அந்தக் கட்சியின் வினோஜ் பி.செல்வம். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான போர் என்றுள்ளார்.
கிஷோர் கே.சுவாமியை திமுக கைது செய்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உதயநிதி பிரதமரை விமர்சித்தபோதும் திருமாவளவன் பார்ப்பனர்களை விமர்சித்தபோதும் எங்கே போனது இந்த ஜனநாயகம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அந்தக் கட்சியின் காயத்ரி ரகுராம்.
திராவிட முன்னேற்றக்கழகம் ஒடுக்குமுறையில் ஈடுபடுவதாகக் கூறியிருக்கிறார் கிஷோரின் சக பதிவரான மாரிதாஸ். கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவருக்கு பாஜவினர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kishore K Swamy arrest : கருத்துச் சுதந்திரமா? எல்லை மீறலா? கிஷோர் கே.சுவாமி பதிவுகள் சொல்வதென்ன?