Beela Venkatesan IAS: கொரோனா காலத்தில் பம்பரமாய் சுற்றியவர்.. யார் இந்த பீலா வெங்கடேசன்?
Beela Venkatesan IAS Profile: தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் இன்று தன்னுடைய 56 வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். யார் இவர் என்பதை இந்த இங்கே பார்ப்போம்.

Beela Venkatesan IAS Profile: தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் இன்று தன்னுடைய 56 வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். கொரோனா காலத்தில் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த பீலா வெங்கடேசன் யார் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
யார் இந்த பீலா வெங்கடேசன்:
கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராணி வெங்கடேசன் மற்றும் காவல் துறை டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற எஸ்.என்.வெங்கடேசனுக்கு மகளாக 1969 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் இந்த பீலா வெங்கடேசன். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமம் பீலா வெங்கடேசனின் சொந்த ஊராகா இருந்தாலும் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாமும் சென்னையில் தான். படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். இச்சூழலில் தான் கடந்த 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கொரோனா காலத்தில் பம்பரமாய் சுற்றியவர்:
மருத்துவப்படிப்பை முடிந்து இருந்தாலும் இவருக்கு இந்திய குடிமைப்பணி மீது ஆர்வம் ஏற்ப்பட்டதை தொடர்ந்து அதற்கான தேர்வை எழுதி கடந்த 1997 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சியும் பெற்றார். ஆரம்பத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இவர் பணிபுரிந்தது பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் பணி புரிந்தார். பின்னர், இந்திய ஹோமியோபதி மருத்துவம் மத்திய ஜவுளித்துறையிலும் பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து தனது கணவர் தமிழ் நாட்டுக்கு மாரியதால் தானும் தமிழக கேடரை கேட்டுப் பெற்று தமிழ் நாட்டிற்கு வந்தார். அந்த வகையில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன் வளத்துறை இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டதை அடுத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பதவி ஏற்றார். அந்த சமயத்தில் பம்பராமாக சுற்றினார். இதன் மூலம் தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சில் நீங்க இடம் பிடித்தார். அண்மையில் தனது கணவர் ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பீலா வெங்கடேஷ் என்று பெயரை மாற்றிக்கொண்டார். தற்போது இவர் தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இச்சூழலில் தான் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.





















